பிந்திய செய்திகள்

அசத்தல் கேஷ்பேக் வழங்கும் வாட்ஸ்அப்

உலகின் முன்னணி நிறுவனமான வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களிடம் ஒரு சேவையை பயன்படுத்த வைக்க அசத்தலான யுக்தியை கையாள முடிவு செய்துள்ளது. அதன்படி அதிகாரப்பூர்வ காப்பரேட் சப்போர்ட் வலைப்பக்கத்தில் கேஷ்பேக் பற்றிய தகவல் இடம்பெற்று இருக்கிறது. வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு பயனர்களுக்கு மூன்று முறை பணம் அனுப்பினால், ரூ. 11 வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் பேமண்ட் சேவையை 100 மில்லியன் பயனர்களுக்கு நீட்டிக்க இந்திய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியதை அடுத்து, வாட்ஸ்அப் நிறுவனம் கேஷ்பேக் சலுகையை அறிவித்து இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு முதல் பேமண்ட் சேவையை வழங்க வாட்ஸ்அப் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

குறைந்தபட்சம் 30 நாட்களாக பேமண்ட் சேவையை பயன்படுத்தி வருவோருக்கு மட்டும் இந்த சலுகையை வாட்ஸ்அப் முதற்கட்டமாக வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் கேஷ்பேக் ரிவார்டுகளை வழங்குவதற்கான சோதனையை வாட்ஸ்அப் இந்தியாவில் நடத்தியது.

கேஷ்பேக் சலுகையின் மூலம் வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் மொபைல் பேமண்ட் சந்தையில் ஆழமாக கால்பதிக்க முடியும். இந்த சந்தையில் தற்போது கூகுள் பே மற்றும் வால்மார்ட் நிறுவனத்தின் போன்பெ போன்ற சேவைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts