பிந்திய செய்திகள்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரருக்கு கோவிட் உறுதி

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. நாளை நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து டெல்லி வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. நாளை நடைபெறும் போட்டிக்காக புனே செல்ல தயாராக இருந்த வீரர்கள் இன்று அவர்களது அறையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவுடன் போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் டெல்லி அணியின் பிசியோ ஃபர்ஹார்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இந்நிலையில் தற்போது டெல்லி அணி வீரர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடஸ் அணியில் வருண் சக்ரவர்த்திக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டு பின் செப்டம்பரில் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts