வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டிக்கர் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் அனைவருக்கும் பிடித்துபோய் ஸ்டிக்கரை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இதை தொடர்ந்து 3-வது வகை செயலிகள் பயனர்களுக்கு பிடிக்கும் வகையில் திரைப்பட வசனங்கள், கதாப்பாத்திரங்கள் ஆகியவற்றை வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்களாக வெளியிட்டன. இதுவும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது வேறு செயலிகளில் உதவி இல்லாமல் வாட்ஸ்ஆப்பிலேயே நமக்கு பிடித்த புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக அனுப்பும் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தை வாட்ஸ்ஆப் வெப்பில் மட்டுமே பயன்படுத்த முடியும். இவற்றை பயன்படுத்த வாட்ஸ்ஆப் வெப்பை திறந்து ஏதாவது ஒரு சாட் விண்டோவிற்குள் செல்லவும்.
பிறகு அதில் உள்ள Attachment ஐகானை கிளிக் செய்து ஸ்டிக்கர் என்பதை செலக்ட் செய்யவும்.
இப்போது ஃபைல் எக்ஸ்பிளோரரில் சென்று உங்களுக்கு பிடித்த போட்டோவை செலக்ட் செய்து ஓபன் தரவும்.
இவற்றை அனுப்பினால் ஸ்டிக்கர் வகையில் செல்லும். இந்த ஸ்டிக்கரை ரைட் கிளிக் அல்லது நீண்ட நேரம் பிரஸ் செய்து சேவ் செய்து வைத்துகொள்ளலாம்.
இந்த அம்சத்தில் புகைப்படத்தின் பேக்கிரவுண்டை நீக்கும் வசதி இடம்பெறவில்லை.
நீங்கள் பேங்கிரவுண்ட் நீக்கப்பட்ட புகைப்படங்களை அனுப்பினால் வாட்ஸ்ஆப்பில் தரப்படும் ஸ்டிக்கர்கள் போலவே இருக்கும்.