மிக சுலபமாக செய்யக்கூடிய சொக்கலேட் டோனட்

தேவையான பொருட்கள்

கோதுமை மா – 500 கிராம்

ஈஸ்ட் – 3 தேக்கரண்டி

உருகிய வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி

சிறிது சூடான நீர் – ஒரு கப்

முட்டை – 1

சர்க்கரை – 3 மேசைக்கரண்டி

இளம்சூட்டில் பால் – 3/4 கப்

உப்பு – சிறிதளவு



ஈஸ்ட்டில் இளஞ்சூடான நீரை கொஞ்சம் சேர்த்து அதில் 2 மேசைக்கரண்டி கோதுமை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். நல்ல கட்டியான பதார்த்தத்தில் வைத்து 20 நிமிடங்கள் பொங்க விடுங்கள்.

கோதுமை மாவில் உருகிய பட்டர், முட்டை, சீனி, உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். இதில் முதலில் செய்த ஈஸ்ட் கலவையை போட்டு கலக்குங்கள்.

பின்னர் பால் சேர்த்து கையில் ஒட்டாத பதார்த்தத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். இந்த கலவையை ஈரமான துணியால் 1 மணி நேரம் மூடி வையுங்கள்.

அதன் பிறகு டோனட் வடிவத்திற்கு ஏதாவது ஒரு அச்சில் எடுத்து பின்னர் அதனை பொரித்து எடுங்கள்.

சொக்கலேட் சோஸ் செய்யும் முறை

குக்கிங் சொக்கலேட் – 5 துண்டுகள்
தூய பால் – 2 தேக்கரண்டி



குக்கிங் சொக்கலேட்டை சற்று உருக்கி எடுத்து அதில் பால் சேர்த்துக் கொள்ளவும்.
பின்பு அதை பொறித்த டோனத்தின் மீது ஊற்றி பரிமாறவும்.
Exit mobile version