தேவையான பொருட்கள்
கோதுமை மா – 1 கோப்பை
கொக்கோ தூள் – 1/2 கப்
பேக்கிங்சோடா – 1 தேக்கரண்டி
சிவப்பு சர்க்கரை – 1 கப்
பால் – 1 கப்
மரக்கறி எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
நெஸ்கொஃபி தேக்கரண்டி – 1
உப்பு
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
நெஸ்கொஃபியில் 1 மேசைக்கரண்டி சூடான நீரைச் சேர்த்து கரைக்கவும். அடுப்பை 180 சி வரை சூடாக்கவும்.
ஒரு பேக்கிங் தட்டில் வெண்ணெய் தடவி தயாராக்குங்கள்.
ஒரு பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் போட்டு சூடாக்கவும்.
வெண்ணெய் உருகும்போது, அதில் சிறிது எண்ணெய் சேர்க்கவும்.
இப்போது பால், கரைத்த நெஸ்கொஃபி, எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு விஸ்க் செய்யவும்.
மாவில் பேக்கிங் பவுடர் மற்றும் கொக்கோ பவுடர் சேர்த்து மூன்று முறை சளித்து எடுக்கவும்.
இப்போது இதை வெண்ணெயில் சேர்த்து கிளறவும். பிறகு ஒரு பேக்கிங் தட்டில் போட்டு, 180 செல்ஷியஸிற்கு 30 நிமிடங்கள் சுடவும்.