பிந்திய செய்திகள்

ஆசியாவிலேயே அதிக பணவீக்க நாடாக உள்ள இலங்கை

உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் ஆறாவது இடத்தில் இலங்கைஉள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதென ஜோன் ஹொப்கின்ஸ்(Joan Hopkins) பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஆசியாவிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையின் பணவீக்கம் 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புதிய புள்ளிவிரங்கள் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் இலங்கையின் பணவீக்கம் 55 சதவீதமாக உயர்ந்தது. இந்தத் தரவு 24/03/2022 திகதிய கணக்கிடப்பட்டது. உலகிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக வெனிசுலா அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜோன் ஹொப்கின்ஸ்(Joan Hopkins) பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய புள்ளிவிபரங்களுக்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts