Home இலங்கை முருகண்டியில் பேருந்தும் உழவு இயந்திரமும் மோதிய விபத்தில் 1வர் பலி சிலர் படு காயம்!

முருகண்டியில் பேருந்தும் உழவு இயந்திரமும் மோதிய விபத்தில் 1வர் பலி சிலர் படு காயம்!

0
முருகண்டியில் பேருந்தும் உழவு இயந்திரமும் மோதிய விபத்தில் 1வர் பலி சிலர் படு காயம்!

முல்லைத்தீவு – முறிகண்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

May be an image of 1 person and beard

குறித்த சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளதுமுறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த கழிவகற்றும் உழவு இயந்திரத்தின் பின் பகுதியில் அதே திசையில் பயணித்த சொகுசு பேருந்து மோதியுள்ளது.

முறிகண்டி பகுதியில் விபத்து: புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஊழியர் பலி - மூவர் படுகாயம்.

விபத்தில் உழவு இயந்திரம் பலத்த சேதங்களுக்குள்ளாகித் தடம்புரண்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தைச் செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

முறிகண்டி பகுதியில் விபத்து: புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஊழியர் பலி - மூவர் படுகாயம்.

குறித்த விபத்தில் கறிப்பட்டமுறிப்பு பகுதியைச் சேர்த்த 35 வயதுடைய ஜெயராம் பிரசாத் என்ற இளம் குடும்பஸ்தரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் சாரதியாக பணிக்கமர்த்தப்பட்டுள்ள அதேவேளை படுகாயம் அடைந்த மற்றைய மூவரும் சுகாதார சிற்றூழியர்களாவர்.

முறிகண்டி பகுதியில் விபத்து: புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஊழியர் பலி - மூவர் படுகாயம்.

படுகாயமடைந்த மூவரும் அவசர அழைப்பு நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முறிகண்டி பகுதியில் விபத்து: புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஊழியர் பலி - மூவர் படுகாயம்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here