இழுவை படகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து, அவுஸ்ரேலிய எல்லைக் காவலர்களால் கைப்பற்றப்பட்டு, அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
சுமார் 19 நாட்களுக்கு முன்னர் இழுவை படகில் பயணித்த அவர்கள், அவுஸ்ரேலிய கடற்கரைக்கு அருகாமையில் சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4.40 மணியளவில் அவுஸ்ரேலிய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இந்த குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.













































