பிந்திய செய்திகள்

வெளியேற முடியாது – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தோல்வியடைந்த ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது. எஞ்சிய காலத்திலும் தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகித்து நாட்டை சீரழித்துள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அவதானம் செலுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருந்தால் முழுமையான அதிகாரம் காணப்பட வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் அதனை முழுமையாக இரத்து செய்து வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமையை அமுல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல மாதங்களாக வீதிப் போராட்டங்கள் தம்மை பதவி நீக்கம் செய்யுமாறு அழைப்பு விடுத்த போதிலும் தனது பதவிக்காலத்தில் எஞ்சிய இரண்டு வருடங்களையும் முடிப்பதாக தெரிவித்த அவர், மீண்டும் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts