பிந்திய செய்திகள்

பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 12 அகவையுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 04.06.2022 அன்று இரவு நித்திரை கொள்ள சென்ற சிறுமி அதிகாலையில் வீட்டில் காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவி டிக்டக்கில் அண்மையில் தொடர்பில் இருந்ததாகவும் ஹட்டன் பகுதியினை சேர்ந்த நண்பன் ஒருவரை காதலித்துள்ளதாகவும் Tiktok தகவலின் படி மாணவி காதலனை தேடி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணைகளை மேற்கொண்ட பொலீஸ் குழு ஒன்று சிறுமி காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இளைஞனை தேடி ஹட்டன் நோக்கி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts