Home இலங்கை தமிழ் கட்சிகள் ஒருமித்த முடிவை எட்ட நாளை கலந்துரையாடல்!

தமிழ் கட்சிகள் ஒருமித்த முடிவை எட்ட நாளை கலந்துரையாடல்!

0
தமிழ் கட்சிகள் ஒருமித்த முடிவை எட்ட  நாளை கலந்துரையாடல்!

முன்னதாக இலங்கை தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், டெலோ, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி என்பன கூடி இது குறித்து கலந்துரையாடியிருந்தன.

இருப்பினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும் கூட்டத்தில் எட்டப்படும் முடிவுகளை வைத்து தாம் ஒரு இணக்கப்பாட்டிற்க்கு வர அன்றைய தினம் முடிவு செய்தனர்.

அதன்படி பிரதமர் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தில் 21 ஆவது திருத்தம் குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

எனவே நாளை கூடவுள்ள தமிழ் கட்சிகள், 21 ஆவது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடி தமது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர்.

நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள குறித்த கலந்துரையாடல் இணைய வழி ஊடாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here