Saturday, April 12, 2025

ஏசி வெடித்து ஒரே குடும்பத்தில் 4 பேர் மரணம்

இந்தியாவில் கர்நாடகாவில் ஏ.சி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந் தைகள் உட்பட‌ 4 பேர் பரிதாபமாக பலியாயினர்.

கர்நாடக மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மரிய மானஹள்ளியை சேர்ந்தவர் வெங்கட் பிரசாந்த் (42). அவர் தன‌து மனைவி சந்திரகலா (38), மகன் ஆத்விக் (6) மகள் பிரேரனா (8)ஆகியோருடன் வீட்டில் வியாழக்கிழமை இரவு தூங்கினார். நேற்று அதிகாலை வேளையில் திடீரென ஏ.சி. வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததுடன், அறைகளில் புகை சூழ்ந்தது.

இதில் சிக்கி, வெங்கட் பிர சாந்த், அவருடைய மனைவி லட்சுமி மற்றும் 12 வயதுக்கும் குறைவான 2 குழந்தைகள் ஆகிய 4 பேரும் உயிரிழந்தனர். பொலிசாரும், தீயணைப்பு படை யினரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

4 பேரின் சடலங்களும் கைப் பற்றப்பட்டு, விஜயநகர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Quantcast
Exit mobile version