இன்று (09) இலங்கைக்கு பெரிய மாற்றத்துடன் புதிய தொடக்கம் தேவை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கர்தினால் இதனைத் தெரிவித்துள்ளார்.
இப்போது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து நாடகம் ஆடுவதைப் பார்க்கிறோம்.இன்று நாட்டிற்கு ஒரு பெரிய மாற்றம் தேவை. இப்போது நமது வெளியுறவு அமைச்சரும் நமது நிதி அமைச்சரும் சென்று சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்க வேண்டும்.
நாம் வேறு நாடுகளுக்குச் சென்று கைநீட்டி பிச்சை எடுக்க வேண்டும். இந்தியாவைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் தான் வசூலித்த பணத்தில் சிலவற்றை இலங்கைக்குக் கொடுப்பதாக நேற்று பத்திரிகையில் பார்த்தேன். அதாவது பிச்சைக்காரர்களை விட மோசமான நிலைக்கு விழுந்துவிட்டோம்.
இந்த நிலை தொடர அனுமதிக்க முடியாது. இந்த அமைப்பை மாற்ற இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.