Home இலங்கை யாழில் காணாமல் போன 27 வயதான கடற்படை வீரர் சடலமாக மீட்பு

யாழில் காணாமல் போன 27 வயதான கடற்படை வீரர் சடலமாக மீட்பு

0

யாழ்ப்பாணம்-நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை வீரர், அனலைதீவு கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மேலும் தெரியவருகையில்

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினரின் படகுகள் மோதி குறித்த கடற்படை வீரர் காணாமல் போயிருந்தார்.இந்நிலையில் இன்றையதினம்(12)அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கம்பளையைச் சேர்ந்த 27 வயதான சாகர பியந்த ஜயசேகர என்ற கடற்படை வீரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version