பிந்திய செய்திகள்

இலங்கையை மறந்த சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு ஏப்ரல் மாதத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 43.3 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா அமைச்சின் கூற்றுப்படி, ஏப்ரல் 2022 இல் இலங்கைக்கு 60,359 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மார்ச் 2022 இல் பதிவாகிய 106,500 சுற்றுலாப் பயணிகளில் இருந்து இது 46,141 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு 82,327 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், பெப்ரவரியில் 96,507 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் 100,000 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்பட்டது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts