23 வருடங்களில் இல்லாத மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்த இலங்கை !

23 வருடங்களில் இலங்கையில் தேயிலை ஏற்றுமதி மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருளாக தேயிலை உள்ளது. தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு முன், ஆண்டுக்கு 1.3 பில்லியன் அமெரிக்க டொலரை இது ஈட்டி வந்தது.

எனினும் தற்போது 1948 இல் சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது, நவம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி 18 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்லது.

Exit mobile version