Home சினிமா நியூ லுக்கில் நடிகர் விஜய்- இணையத்தில் வைரலாக்கும் புகைப்படம்

நியூ லுக்கில் நடிகர் விஜய்- இணையத்தில் வைரலாக்கும் புகைப்படம்

0
நியூ லுக்கில் நடிகர் விஜய்- இணையத்தில் வைரலாக்கும் புகைப்படம்

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். இப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய், தளபதி 66 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புதிய தோற்றத்தில் இருக்கும் விஜய், தளபதி 66 படத்தின் நியூ லுக் இதுதான் என்று ரசிகர்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version