மீண்டும் சற்று பதற்றமான சூழல் கொழும்பில்

மீண்டும் சற்று பதற்றமான சூழல் கொழும்பில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் வீதி மறிக்கப்பட்டு மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமக்கு எரிவாயு பெற்றுத் தருமாறு கோரியே இந்த போராட்டத்தை மக்கள் ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் மீண்டும் பதற்றம்- குவிக்கப்பட்ட காவல்துறை!

இந்நிலையில், எரிவாயு பெற்றுக் கொடுக்கப்படுமாக இருந்தால் வீதியிலிருந்து விலகி போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிவக்கப்பட்டுள்ளது

Exit mobile version