Home தொழினுட்பம் ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ் வெளியீட்டு விவரம்

ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ் வெளியீட்டு விவரம்

0

சீன சந்தையில் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ்- ரெட்மி நோட் 11T ப்ரோ மற்றும் நோட் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது.

இந்த நிலையில், இரு மாடல்களின் இந்திய வெளியீடு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ் இந்தியாவில் ரெட்மி K50i சீரிஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் போக்கோ X4 GT சீரிஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ரெட்மி நோட் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரெட்மி K50i ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 11T ப்ரோ மற்றும் நோட் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 6.6 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரு மாடல்களிலும் முறையே 120Hz மற்றும் 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிசில் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 512GB மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிசின் பிரைமரி கேமராவுடன் 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 16 MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போனில் 4400mAh பேட்டரி, 67W பாஸ்ட் சார்ஜிங் வசதி, நோட் 11T ப்ரோ பிளஸ் மாடலில் 5080mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version