சற்றுமுன் கொழும்பு பிலவர் டெரஸ் வீதி பகுதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை சற்றுமுன் பதிவாகியுள்ளது.
அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நோடீல் கிராமத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டுள்ளனர்.
எனினும் அப்பகுதியில் பரீட்சை நிலையமொன்று இயங்கி வரும் நிலையில் அப்பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களை அனுப்ப முடியாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் பெருந்திரளான காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
கொழும்பில் – கேம்பிரிஜ் பிரதேச பகுதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்துள்ள நிலையில் அங்கும் வீதியை மறித்துள்ளனர்.
மாற்றுவீதிகள் ஊடாக பிரதமரின் அலுவலகத்திற்கு செல்லும் முயற்சியிலேயே கேம்பிரிஜ் பகுதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அப்பகுதியிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த வீதிமறியல் போராட்டத்திற்கு எதிராக காவல்துறையினர் நீதிமன்ற தடை உத்தரவை பெற்றுள்ளனர்.
இதனையடுத்து நீதிமன்ற தடை உத்தரவிற்கு அமைவாக தற்காலிகமாக வீதிமறியல் போராட்டத்தை கைவிடுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்த போதும்
தற்போது பிலவர் எவன்யூ பகுதிக்கு சென்று பிரதமர் அலுவலத்தை அடைவதற்கான முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.