இலங்கையை 7 விக்கெட்டுகளில் தோற்கடித்த மேற்கிந்தியத்தீவுகள்

மேற்கிந்தியத்தீவுகள் அணி இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இலங்கை ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இலங்கை சார்பில் கமிந்து மெண்டிஸ் 39 பந்துகளில் 52 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷமர் ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை அதிகமாக வீழ்த்தினர். 148 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் அணித் தலைவர் ஷாய் ஹோப் 54 பந்துகளில் 65 ஓட்டங்களை எடுத்தார். போட்டியின் ஆட்டநாயகனாக ஜேசன் ஹோல்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி:20 போட்டி ஜூன் 14 அன்று அதே மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.