உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி மற்றும் செயற்கைக்கோள் நிறுவனமான SpaceX, பொதுப் பங்கு வெளியீடு (IPO) மூலம் பங்குச்சந்தையில் நுழையத் தயாராகி வருகிறது.
அமெரிக்கப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் இந்த நிறுவனம் ரகசிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.
ஒரு தனியார் நிறுவனம் முதன்முதலாகத் தனது நிறுவனப் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதே பொதுப் பங்கு வெளியீடு ஆகும்.
இந்தப் பொதுப் பங்கு வழங்கலைத் தொடர்ந்து, ஸ்பேஸ்எக்ஸின் சந்தை மதிப்பு 1 ட்ரில்லியன் டொலரை தாண்டும் என்று பல்வேறு சந்தைவல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதன் மூலம், உலகின் முதல் ‘ட்ரில்லியனர்’ (Trillionaire) என்ற பெருமையை எலான் மஸ்க் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் எதிர்வரும் ஜூன் மாதத்தில் அதிகாரப்பூர்வமாகப் பொதுப் பட்டியலுக்கு வரத் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் 50 பில்லியன் டொலர் அல்லது அதற்கும் அதிகமான நிதியைத் திரட்ட இலக்கு வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
