இலங்கையில் இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு குறித்து வளிமண்டல திணைக்களம் தலைமைப் பொறுப்பாளர் வெளியிட்டுள்ளார். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். இப்பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவிப்பு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.
