Home Blog Page 4

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு டெங்கு எச்சரிக்கை!

கடந்த வாரத்தில் இலங்கையில் 2 ஆயிரத்து 52 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக மேல் மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கடந்த வாரம் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இன்றைய நாளுக்கான ராசி பலன் (08-06-2022)

மேஷம்: அசுவினி: பிரச்னைகள் இன்று முடிவிற்கு வரும். செலவு அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானம் வரும்.
பரணி: சுய ஆற்றல் வெளிப்படும். உங்கள் செயல்களைக் கண்டு எதிரிகள் பின் வாங்குவார்கள்.
கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட்டு செல்வாக்கை நிரூபிப்பீர்கள். மகிழ்ச்சியான மனநிலை உண்டாகும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: எதிர்பார்த்த நன்மை தள்ளிப் போகும். பிள்ளைகளின் வழியே செலவு உண்டாகும்.
ரோகிணி: சங்கடம் விலகும். உங்களுடைய அறிவாற்றலால் பிரச்னைகளில் இருந்து வெளியில் வருவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: பெற்றோரின் ஆதரவால் பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3, 4: அரசு வழி முயற்சிகளில் எதிர்பார்க்கும் நன்மையை அடைய முடியாமல் போகும்.
திருவாதிரை: எதிர்பார்த்தவற்றில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப நெருக்கடி தீரும். சுமாரான நாள்.
புனர்பூசம் 1, 2, 3: அரசு விஷயத்தில் கவனம் தேவை. வில்லங்க விஷயத்தில் ஈடுபட வேண்டாம்.

கடகம்: புனர்பூசம் 1, 2, 3: தடைகளை சரி செய்வீர்கள். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.
பூசம்: நீண்ட நாள் பிரச்னைகள் இன்று முடிவுக்கு வரும். தனித்திறமை வெளிப்படுத்தி புகழடைவீர்கள்.
ஆயில்யம் நெருக்கடிக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். எதிரியால் ஏற்பட்ட சங்கடம் தீரும். யோகமான நாள்.

சிம்மம்: மகம்: சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருள்களை கையாள்வதில் எச்சரிக்கை கவனம் தேவை.
பூரம்: குடும்ப நிலை உயரும். புதிய சொத்து, நவீன சாதனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
உத்திரம் 1: யோசிக்காமல் செயல்பட்டு அதன் வழியே சங்கடத்தை அடைவீர்கள். பணம் செலவாகும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். மனம் மகிழும்படியான சூழல் உருவாகும்.
அஸ்தம்: வீட்டில் திருமணப் பேச்சு எழும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன்கள் தேடி வரும்.
சித்திரை 1, 2: குருவருளால் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும்.

துலாம்: சித்திரை 3, 4: எதிர்பாராத வகையில் திடீர் செலவு தோன்றும். மனதில் வீண் குழப்பம் வந்து செல்லும்.
சுவாதி: வாகனப் பயணத்தில் கவனம் தேவை. மனம் விரும்பாத சம்பவம் ஒன்று இன்று நடைபெறும்.
விசாகம் 1, 2, 3: மனம் ஒருநிலையில் இல்லாமல் போகும். செயல்களில் தடுமாற்றம் உண்டாகும்.

விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். செயல்களில் இன்று வெற்றி சந்திப்பீர்கள். யோகமான நாள்.
அனுஷம்: உங்கள் மனம் உற்சாகமடையும். முயற்சியில் இன்று சாதகமான நிலை உருவாகும்.
கேட்டை: எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள். எதிர்பார்த்தவற்றில் லாபமான நிலையை இன்று காண்பீர்கள்.

தனுசு : மூலம்: வேலை தேடியவர்களுக்கு நல்ல தகவல் வரும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும்.
பூராடம்: உங்களுடைய ஆற்றல் வெளிப்படும். முயற்சியில் தடை விலகி நினைத்ததை அடைவீர்கள்.
உத்திராடம் 1: சிந்தித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: எதிர்பார்த்த விஷயத்தில் தாமதம் ஏற்படும். உங்களை சிலர் விமர்சனம் செய்வார்கள்.
திருவோணம்: பிரச்னைகள் விலகும். செயல்களில் வேகம் உண்டாகும் என்றாலும் முடிவு தாமதமாகும்.
அவிட்டம் 1, 2: தந்தைவழி உறவுகளால் நன்மை உண்டாகும். குடும்ப பிரச்னை விலகி சந்தோஷமடைவீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4: மனநிலை பாதிக்கும் வகையில் சிலர் செயல்படலாம். கவனமுடன் செயல்படுவது நல்லது.
சதயம்: தேவையற்ற சங்கடங்களால் சோர்வு ஏற்படும். பயணத்தில் எச்சரிக்கையும் கவனமும் தேவை.
பூரட்டாதி 1, 2, 3: புதிய பிரச்னை ஒன்றை சந்திப்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும்.

மீனம்: பூரட்டாதி 4: உற்சாகமுடன் செயல்படுவீர்கள்.குழப்பம் விலகி தெளிவடைவீர்கள். ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி: புதிய சிந்தனை மேலோங்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நண்பர்கள் உதவுவர். .
ரேவதி: கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கேம் விளையாடி வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

கரூர் மாநகராட்சி உட்பட்ட சுங்ககேட் பகுதியை அடுத்து உள்ளது சிவசக்தி நகர். இந்தப் பகுதியில் கணவரை பிரிந்து சென்று விட்ட நிலையில் தனது சஞ்சய் என்கின்ற 23 வயது மகனுடன் சத்தியபாமா என்பவர் வசித்து வந்துள்ளார். 

ஒரு தனியார் கல்லூரியில் கேட்டரிங் படித்துள்ளார். அந்த கல்லூரியில் படிப்பை தொடர முடியாமல் வெளியேறி மற்றொரு தனியார் கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் படித்து வந்துள்ளார். 

கல்லூரிக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் கடந்த ஒரு ஆண்டு காலமாக கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு மாணவன் வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார்.

12ம் வகுப்பு படிக்கும் போதே free fire விளையாட்டில் ஆர்வம் கொண்ட சஞ்சல் பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்த பிறகு அந்த ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாபரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதை அடுத்து இளைஞர் தொடர்ந்து அந்த கேமை ஆடி வந்துள்ளார்.

இரவு பகலாக விளையாடி நிறைய பணம் சேர்த்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கிடைக்கின்ற வேலைகளை உடன் வரும் சக நண்பர்கள் சென்று வேலை பார்த்து வந்துள்ளான். 

உடன் இருந்த ஒரு நண்பன் பேசுவதற்காக செல்போனை வாங்கி கேமின் user I’d, password திருடி தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டு செல்போன் தொலைந்து விட்டதாக கூறி ஏமாற்றியுள்ளனர். மேலும், சஞ்சயிடம் இருந்து திருடப்பட்ட user name, password கொண்டு விளையாடுவதை பார்த்து சக நண்பர்களிடம் கூறி புலம்பியுள்ளான். 

இது நடந்து 6 மாத காலம் ஆன நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக மற்றொரு user I’d, password விளையாடி வந்துள்ளதை மற்றொரு நண்பன் செல்போனில் பேசி விட்டு தருவதாக கூறி வாங்கி திருடிக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக மன உளைச்சலில் இருந்த சஞ்சய் தனது அம்மா வேலைக்கு சென்ற நேரத்தில் அம்மாவின் புடவையை கொண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொழும்பு துறைமுக நகர முதலீட்டாளர்களுக்கு 40 வருடங்கள் வரை வரிச் சலுகை!

இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்திற்கு பெறப்பட்ட வெளிநாட்டு முதலீடு ஒரு பில்லியன் டொலர்கள் என்பதுடன், இலங்கையில் ஒரு திட்டத்திற்காக பெறப்பட்ட அதிகூடிய வெளிநாட்டு முதலீடு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு 

ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.


பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் 40 ஆவது அதிகாரத்திற்கு அமைவாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்திய வங்கியிடமிருந்து 55 மில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி

நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் 695 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இதனை அடுத்து இன்றும் நாளையும் குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியேற முடியாது – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தோல்வியடைந்த ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது. எஞ்சிய காலத்திலும் தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகித்து நாட்டை சீரழித்துள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அவதானம் செலுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருந்தால் முழுமையான அதிகாரம் காணப்பட வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் அதனை முழுமையாக இரத்து செய்து வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமையை அமுல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல மாதங்களாக வீதிப் போராட்டங்கள் தம்மை பதவி நீக்கம் செய்யுமாறு அழைப்பு விடுத்த போதிலும் தனது பதவிக்காலத்தில் எஞ்சிய இரண்டு வருடங்களையும் முடிப்பதாக தெரிவித்த அவர், மீண்டும் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

இன்றைய நாளுக்கான ராசி பலன் (07-06-2022)

மேஷம் : அசுவினி: நிதானித்து செயல்பட வேண்டிய நாள். மற்றவர் ஆலோசனைக்கு இடம் கொடுக்க வேண்டாம்.
பரணி: உறவினர் எதிராக செயல்படுவர். முடிவிற்கு வரக்கூடிய முயற்சி கடைசி நேரத்தில் தள்ளிப்போகும்.
கார்த்திகை1: இன்று நீங்கள் எதிர்பார்த்தவை சங்கடத்தில் முடியும். அந்நியரை நம்பி ஈடுபடும் முயற்சி வீணாகும்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4: அடுத்தவர் பிரச்னையில் தலையிட வேண்டாம். வழக்கில் எதிர்மறையான பலன் கிடைக்கும்.
ரோகிணி: வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் இன்று வேண்டாம்.
மிருகசீரிடம் 1, 2: சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். நேர்மையை பின்பற்றுவது நல்லது.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: பொருளாதார நெருக்கடி விலகும். பழைய கடன்கள் பைசலாகும். லாபமான நாள்.
திருவாதிரை: எதிர்பார்த்ததை இன்று அடைவீர்கள். உங்கள் நிலையில் உயர்வு உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3: முயற்சிகளில் லாபம் காண்பீர்கள். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். யோகமான நாள்.

கடகம் : புனர்பூசம் 1, 2, 3: பணம், நகை விஷயத்தில் கவனம் தேவை. இல்லையெனில் இழப்புகளை சந்திக்க நேரிடும்.
பூசம்: பேச்சில் கவனம் தேவை. இன்று நிதானம் அவசியம். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
ஆயில்யம் கடனில் இருந்து விடுபட முயற்சிப்பீர்கள். ங்கள் செயல்களில் இன்று நெருக்கடி அதிகரிக்கும்.

சிம்மம் : மகம்: மனக்குழப்பம் வரலாம். எந்த ஒன்றிலும் சரியான முடிவிற்கு வரமுடியாமல் திண்டாடுவீர்கள்.
பூரம்: மனதில் புதிய எண்ணம் உருவாகி ஆசை அதிகரிக்கும். தவறான வழியில் பணம் தேட வேண்டாம்.
உத்திரம் 1: எதிரிகள் பலம் பெறுவர் முயற்சிகளில் தடை உண்டாகி உங்களை சங்கடப்படுத்தும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: எதிர்பாராத பயணம் உண்டாகும். உங்களுடைய செயல்கள் விடாமுயற்சியால் நிறைவேறும்.
அஸ்தம்: பணம் பல வழிகளிலும் செலவாகும். அத்தியாவசிய முயற்சிகளை மட்டும் இன்று மேற்கொள்ளவும்.
சித்திரை 1, 2: உங்கள் முயற்சிகள் நிறைவேறும். வருவாய்க்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும்.

துலாம் : சித்திரை 3, 4: அடிப்படைத் தேவை இன்று நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் கைக்கு வந்து சேரும்.
சுவாதி: புதிய நட்புகளிடம் கவனம் தேவை. அவசரப்பட்டு யாருக்கும் எந்த உதவியும் செய்ய வேண்டாம்.
விசாகம் 1, 2, 3: நெருக்கடி விலகும். பண வரவில் இருந்த தடை நீங்கும். எதிர்பாராத நன்மை கிடைக்கும்.

விருச்சிகம் : விசாகம் 4: தொழில் நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். செல்வாக்கில் உயர்வு உண்டாகும்.
அனுஷம்: அமைதியுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வாழ்க்கை நிலை உயரும். நன்மை சேரும்.
கேட்டை: வேலையில் இருந்த பிரச்னை திரும். உங்கள் திறமையறிந்து பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

தனுசு : மூலம்: மனதில் இருந்த சங்கடம் விலகும். சுறுசுறுப்பாக செயல்பட்டு தேவையை நிறைவேற்றுவீர்கள்.
பூராடம்: உங்கள் அணுகுமுறையில் மாற்றம் உண்டாகும். எதிரிகள் பணிவர். நினைத்ததை சாதிப்பீர்கள்.
உத்திராடம் 1: செல்வாக்கு உயரும். உங்கள் ஆலோசனைகளை விஐபிகள் ஏற்பர். வெற்றி காண்பீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும்.
திருவோணம்: பயணத்தில் கவனம் தேவை. மனதை பாதிக்கும் வகையில் சில சம்பவங்கள் நடக்கலாம்.
அவிட்டம் 1, 2: அறிமுகம் இல்லாதவரிடம் பழக வேண்டாம். தவறான செயல்களில் ஈடுபடுவது கூடாது.

கும்பம் : அவிட்டம் 3, 4: குடும்ப பிரச்னை முடிவிற்கு வரும். கொடுத்த வாக்கை இன்று நிறைவேற்றுவீர்கள்.
சதயம்: உங்களை விட்டு விலகியவர்கள் தேடி வருவர். அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: செல்வாக்கு உயரும். எதிரிகள் விலகுவர். தந்தை நலனில் கவனம் தேவை.

மீனம் : பூரட்டாதி 4: உடல் நிலை சீராகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும்.
உத்திரட்டாதி: கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வர்.
ரேவதி: வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள். இல்லையெனில் நண்பர் கூட திரியாகலாம்.

அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நாளாக வெள்ளிக்கிழமை

அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நாளாக வெள்ளிக்கிழமையை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நாளாக வெள்ளிக்கிழமையை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை நேற்று தெரிவித்தார்.

Exit mobile version