Home Blog Page 5

இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன.

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி கடந்த மாதம் 19ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் நிலவும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக ஆசிரியர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை வேன் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து நாளை ரணில் விக்கிரமசிங்க விசேட உரை!

நாட்டின் சமகால பொருளாதார நிலைமை மற்றும் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாகவே அவர் இந்த உரையின்போது விசேடமாக கருத்து வெளியிடவுள்ளார்.

பிரதமரின் உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதமும் நாளை மாலை வரை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றில் 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணையையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் சமர்ப்பிக்கவுள்ளார்

இந்த பிரேரணை மீதான விவாதம் புதன்கிழமை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் 2022.04.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கமைய ஒழுங்குவிதி மற்றும் கடன் எல்லையை ஒரு ரில்லியன் ரூபாவினால் அதிகரிப்பதற்கு உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்சட்டத்தின் கீழான தீர்மானமும் நாளைய அமர்வில் விவாதமின்றிய நிலையில் நிறைவேற்றப்படவுள்ளன.

இன்றைய நாளுக்கான ராசி பலன் (06-06-2022)

மேஷம் : அசுவினி: முயற்சியில் கவனம் தேவை. அடுத்தவரை நம்பி முக்கிய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.
பரணி: பணியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆனால் நீங்கள் நினைப்பதற்கு எதிரான முடிவையே காண்பீர்கள்.
கார்த்திகை 1: புதிய முயற்சி வேண்டாம். திட்டமிட்டு செயல்பட்டு நன்மையைக் காண்பீர்கள். சுமாரான நாள்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4: அரசு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. பணியாளர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி: வழக்கமான செயல்களில் நிதானம் தேவை. அரசு விஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.
மிருகசீரிடம் 1, 2: தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறும். தேவையை நிறைவேற்றும் வகையில் பணம் வரும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: நீண்ட நாள் முயற்சி இன்று நிறைவேறும். பணவரவால் பொன் பொருள் வாங்குவீர்கள்.
திருவாதிரை: தடைபட்ட முயற்சி நிறைவேறும். புதிய வேலை வாய்ப்புக்கான அழைப்பு வந்து சேரும்.
புனர்பூசம் 1, 2, 3: வெளியூர் செல்ல நேரிடும். முயற்சிக்குப் பின் நீங்கள் ஈடுபட்ட செயலில் வெற்றி காண்பீர்கள்.

கடகம் : புனர்பூசம் 1, 2, 3: பண விஷயத்தில் கவனம் தேவை. முயற்சி நிறைவேற விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.
பூசம்: முயற்சியில் தீவிரம் காட்டுவீர்கள். அலைச்சல்களின் வழியே நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
ஆயில்யம் நகைகளை அடகு வைத்து முயற்சியை மேற்கொள்வீர்கள். உறவுகள் உதவியாக இருப்பார்கள்.

சிம்மம் : மகம்: எண்ணம் இன்று நிறைவேறும். விஐபிகளின் ஆதரவால் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
பூரம்: பணியாளர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். மனதில் பல சிந்தனைகள் உண்டாகி குழப்பத்தை ஏற்படுத்தும்.
உத்திரம் 1: நண்பர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவைப்படும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: எதிர்பாராத செலவு உண்டாகலாம். அலைச்சல் அதிகரிக்கும். செயலில் கவனம் தேவை.
அஸ்தம்: குடும்பத்தினரால் தொல்லைகளை சந்திப்பீர்கள். வார்த்தையில் கவனம் தேவை. செலவு கூடும்.
சித்திரை 1, 2: புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலை விரிவு செய்வதற்காக செலவு செய்வீர்கள்.

துலாம் : சித்திரை 3, 4: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். பணவரவு கூடும். நினைத்ததை இன்று முடிப்பீர்கள்.
சுவாதி: மனதில் புதிய சிந்தனை உண்டாகும். எதிர்காலத்திற்குரிய வழியை இன்று தேர்வு செய்வீர்கள்.
விசாகம் 1, 2, 3: புத்திசாலித்தனம் வெளிப்படும். முயற்சி நிறைவேறும். திடீர் வரவு உண்டாகும்.

விருச்சிகம் : விசாகம் 4: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். கவனமுடன் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
அனுஷம்: தொழிலை மாற்றி அமைக்கவோ விரிவு செய்யவோ முயற்சிப்பீர்கள். எண்ணம் நிறைவேறும்.
கேட்டை: குரு அருளால் முயற்சி வெற்றியாகும். புதிய வேலைக்கான முயற்சியில் நல்ல தகவல் வரும்.

தனுசு : மூலம்: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி விலகும். முயற்சிகள் இன்று தாமதமாக நிறைவேறும்.
பூராடம்: அறிவாற்றலால் பிரச்னைகளை சமாளிப்பீர்கள். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள்.
உத்திராடம் 1: பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். தந்தை வழியில் ஆதரவு உண்டாகும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: தடைகளும் தாமதமும் உண்டாகும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் வந்து செல்லும்.
திருவோணம்: செயல்களில் இன்று சிரமங்களைக் காண்பீர்கள். உறவினர்களால் பிரச்னை குறுக்கிடலாம்.
அவிட்டம் 1, 2: நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் இன்று ஆதாயத்தை எதிர்பார்க்க முடியாமல் போகும்.

கும்பம் : அவிட்டம் 3, 4: இனிய சம்பவங்களால் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த ஒன்றை இன்று அடைவீர்கள். யோகமான நாள்.
சதயம்: வாழ்க்கைத் துணை வழியே எதிர்பார்ப்பு நிறைவேறும். பண வரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
பூரட்டாதி 1, 2, 3: முயற்சியில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

மீனம் : பூரட்டாதி 4: செயல்களில் இன்று வேகம் இருக்கும். உங்களுக்குண்டான பிரச்னைகளை சரி செய்வீர்கள்.
உத்திரட்டாதி: சுறுசுறுப்பாக செயல்பட்டு பணியில் பாராட்டு பெறுவீர்கள். எதிரி தொல்லைகள் மறையும்.
ரேவதி: எதிர்ப்புகள் விலகும். உங்கள் எண்ணப்படி இன்று செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.

தமிழ் கட்சிகள் ஒருமித்த முடிவை எட்ட நாளை கலந்துரையாடல்!

முன்னதாக இலங்கை தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், டெலோ, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி என்பன கூடி இது குறித்து கலந்துரையாடியிருந்தன.

இருப்பினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும் கூட்டத்தில் எட்டப்படும் முடிவுகளை வைத்து தாம் ஒரு இணக்கப்பாட்டிற்க்கு வர அன்றைய தினம் முடிவு செய்தனர்.

அதன்படி பிரதமர் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தில் 21 ஆவது திருத்தம் குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

எனவே நாளை கூடவுள்ள தமிழ் கட்சிகள், 21 ஆவது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடி தமது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர்.

நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள குறித்த கலந்துரையாடல் இணைய வழி ஊடாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய விமானம் தடுத்து நிறுத்தம்: பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை

ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏ330 ரக விமானம் இலங்கையை விட்டு வெளியேறுவதைத் தடுத்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகளை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த விமானம் தடுத்து வைக்கப்பட்டமையினால் இருநாடுகளுக்கு இடையில் பிரச்சினை ஏற்படவில்லை என விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

விமானம் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பான நீதிமன்ற வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என சுட்டிக்காட்டி இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உயர்மட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்றைய நாளுக்கான ராசி பலன் (05-06-2022)

மேஷம் : அசுவினி: குடும்பத்தினருடன் விருந்துக்கு செல்வீ்ரகள். தாய்வழி உறவுகளின் உதவி உண்டாகும்.
பரணி: மனம் விரும்பிய போக்கில் செயல்படுவீர்கள். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி காண்பீர்கள்.
கார்த்திகை 1: நிம்மதியை இன்று அடைவீர்கள். சிலர் வெளியூர் செல்வர். பிள்ளைகளால் உதவி உண்டு.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4: எண்ணம் இன்று நிறைவேறும். குடும்பத்தினருடன் அமர்ந்து எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள்.
ரோகிணி: குடும்பத்தினரின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: குடும்ப பிரச்னைகளை சரிசெய்வீர்கள். பெரியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: குடும்பத்தினருக்காக பல வழிகளில் செலவு செய்வீர்கள். கையிருப்பில் ஒரு பகுதி கரையும்.
திருவாதிரை: சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாள் எண்ணம் ஒன்று இன்று நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3: நண்பர்களுடன் சேர்ந்து வெளியூர் செல்வீர்கள். உங்களுடைய சந்தோஷத்திற்காக செலவு செய்வீர்கள்.

கடகம் : புனர்பூசம் 1, 2, 3: நினைத்ததை இன்று நிறைவேற்றுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
பூசம்: தந்தை வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்டநாள் எண்ணம் ஒன்று இன்று நிறைவேறும்.
ஆயில்யம் மனதில் குழப்பம் ஏற்படும். குடும்பத்தினர் ஆலோசனையுடன் செயல்படுவதால் நன்மை உண்டாகும்.

சிம்மம் : மகம்: குடும்பத்தினருடன் வெளியில் சென்று வருவீர்கள். தேவையற்ற செலவு அதிகரிக்கும். சிக்கனம் தேவை.
பூரம்: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். செலவு அதிகரிக்கும்.
உத்திரம் 1: வீடு, மனை வாங்கும் முயற்சிப்பீர்கள். வாகன வழியில் செலவு ஏற்படும். கவனமுடன் செயல்படுங்கள்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: எதிர்பார்ப்பு நடந்தேறும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். புதிய முயற்சி கை கொடுக்கும்.
அஸ்தம்: நெருக்கடிகளில் இருந்து மீள்வீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும். இனிய சம்பவம் நடந்து மகிழ்வீர்கள்.
சித்திரை 1, 2: தொழிலை விரிவு செய்வீர்கள். நண்பர்கள் உங்கள் கருத்துடன் ஒத்துப் போவார்கள்

துலாம் : சித்திரை 3, 4: புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் உதவுவர். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
சுவாதி: உங்கள் முயற்சியில் ஒன்று வெற்றி பெறும். நண்பர்களுடன் வெளியில் சென்று வருவீர்கள்.
விசாகம் 1, 2, 3: போட்டிகளை சமாளிக்கும் வகையில் தொழிலில் மாற்றம் செய்வீர்கள். திறமை வெளிப்படும்.

விருச்சிகம் : விசாகம் 4: அறிவாற்றல் வெளிப்படும். நாளை செய்ய வேண்டிய முயற்சிகளுக்கு இன்றே திட்டமிடுவீர்கள்.
அனுஷம்: குடும்பத்தினரின் தேவை நிறைவேறும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்குரிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
கேட்டை: பெற்றோரின் ஆதரவால் எண்ணம் நிறைவேறும். சுய தொழில் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.

தனுசு : மூலம்: இன்று பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் நினைப்பதற்கு மாறாக நடக்க வாய்ப்புண்டு.
பூராடம்: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்காமல் போகும்.
உத்திராடம் 1: நிதானமுடன் செயல்படுங்கள். புதிய முயற்சிகள் இன்று பலனளிக்காமல் போகலாம் கவனம்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: குடும்பத்தினரை சந்தோஷப்படுத்துவீர்கள் நண்பர் ஆதரவால் நினைத்ததை அடைவீர்கள்.
திருவோணம்: குழப்பங்கள் விலகும். எதிரிகளை அடையாளம் காண்பீர்கள். செலவிற்கேற்ற வரவு வரும்.
அவிட்டம் 1, 2: முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகும்.

கும்பம் : அவிட்டம் 3, 4: முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உடல்நிலையில் சங்கடம் விலகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
சதயம்: உறவினர் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உங்களுக்கு எதிரானவர்களின் செயல்களை முறியடிப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: குடும்பத்தினர் நலனில் அக்கறை கொள்வீர்கள். விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவர்

மீனம் : பூரட்டாதி 4: வேலைகளை இன்று ஒத்திப் போடுவீர்கள். குடும்பத்தினருக்காக செலவு செய்வீர்கள்.
உத்திரட்டாதி: அவசர வேலைகளை முடிப்பீர்கள். உடலும் மனமும் சோர்வு பெறும். குடும்பத்தினரின் ஆதரரவு கூடும்.
ரேவதி: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினரை புரிந்து கொண்டு ஆதரவு அளிப்பர்.

சமுர்த்தி வங்கி பயனாளிகளுக்காக வெளிவந்த தகவல்

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி சமுர்த்தி பெறுவோர் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக பயனாளிகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை தெரிவித்தார்.

சமுர்த்தி வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து உரியவர்களுக்கு கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தந்தையின் மெழுகு சிலை முன்பு திருமணம் செய்த மகள்

குடும்பங்களில் தந்தை- மகள் பாசம் என்பது தனித்தன்மை வாய்ந்தது.
அதன்படி தந்தையை இழந்த மகள் ஒருவர் தன் தந்தையின் உருவத்தை மெழுகுச்சிலையாக உருவாக்கி, அதன் முன் திருமணம் செய்துகொண்டார். இந்த உணர்வுப்பூர்வமான கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மனைவி பத்மாவதி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் செல்வராஜ் உடல் நலக்குறைவால் இறந்தார்.

இந்த நிலையில், செல்வராஜின் இளைய மகள் மகேஸ்வரிக்கும், திருக்கோவிலூரில் அச்சகம் நடத்தி வரும் ஜெயராஜ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

தந்தை மீது அதீத பாசம் கொண்ட மகேஸ்வரி, தனது திருமணத்தில் தந்தை இல்லாத குறையைப் போக்கும் வகையில், செல்வராஜின் உருவத்தில் மெழுகு சிலையை உருவாக்க முடிவு செய்தார். இதற்கு தாயார் பத்மாவதியும் சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி ரூ.5 லட்சம் செலவில், அதற்கான வடிவமைப்பாளர்களைக்கொண்டு மெழுகு சிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டது. பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோல் செல்வராஜ் உருவ அமைப்பில் மெழுகுச்சிலையை உருவாக்கினர். அந்த சிலை முன் நேற்று புரோகிதர்களை கொண்டு, திருமண சடங்குகள் நடந்தன.

தந்தை செல்வராஜ் உருவச்சிலை அருகில் தாயார் பத்மாவதி அமர, பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அதன்பின்னர் மகேஸ்வரி. தந்தையின் உருவில் மெழுகு சிலை முன் நின்று திருமணம் செய்து கொண்டார்.

தந்தையின் நினைவு ததும்பலில், மகேஸ்வரி தந்தையின் மெழுகு சிலையை உற்றுபார்க்க அவரது கண்கள் கலங்கியது. உடனே திருமண வீட்டார் அனைவரும் அவரை சமாதானப்படுத்தினர். இந்த காட்சியை பார்த்த திருமணத்துக்கு வந்த உறவினர்கள் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்

“நம்பிக்கையோடு முன்னேறி கொண்டு இருப்பேன்” – பிரபல நடிகை அறிக்கை

‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘சாணிக் காயிதம்’ மற்றும் ‘சர்காரு வாரி பாட்டா’ படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, கீர்த்தி சுரேஷ் நடிப்பை பலரும் பாராட்டினர்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நீண்ட அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு நடிகராக இருப்பது என்பது கடினமான பயணம், நாங்கள் முழுவதும் உயர்வையும் தாழ்வையும் காண்கிறோம். அதுவே பெரும்பாலும் நமது இலக்கைத் தீர்மானிக்கிறது.

சமீபகாலம் எனக்கு ஒரு சோதனையான காலகட்டமாகும், மேலும் எனது சிறப்பை உலகிற்கு கொண்டு வருவதற்கு நான் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதை உணர வைத்த ஒரு கட்டம். என் இதயம் முழுவதும் நன்றி உணர்வோடும் சந்தோஷமும் நிறைந்துள்ளது, ‘சாணி காயிதம்’ மற்றும் ‘சர்காரு வாரி பாட்டா’ படங்களுக்கு நிறைய அன்பு கிடைத்தது.

நான் எப்போதும் எல்லைகளை தாண்டி, விரிவுபடுத்தப்பட்ட நம்பிக்கையோடு முன்னேறி கொண்டு இருப்பேன். விளைவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டேன்” என்று பதிவிட்டு ‘சாணி காயிதம்’, ‘சர்காரு வாரி பாட்டா’ படக்குழுவினருக்கும், அவர் பணியாற்றிய இயக்குனர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்வி அமைச்சு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகவுள்ளதாக அறிவித்துள்ளது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் கடந்த மாதம் 19 ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version