Home Blog Page 7

யாழில் இடம் பெற்ற விபத்து..O/L பரீட்சை எழுதிய மாணவர் உயிரிழப்பு

யாழ்.பருத்தித்துறை – குஞ்சர்கடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மண்டான் கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவருடன் பயணித்த சிவநேசன் கலையொளி (வயது 15) என்பவரே முகம் உட்பட பல பகுதிகளில் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த இருவரும் மோட்டார் சையிக்கிளில் பயணித்த வேளை மாடு குறுக்காக பாய்ந்ததில் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் மாட்டுடன் மோதுண்டு பின்னர் மின்சார கம்பத்துடன் மோதியதில் விபத்து நடைபெற்றுள்ளது.

அதேவேளை உயிரிழந்த மாணவன் தற்போது நடைபெற்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவந்துள்ளது.

உலக அரங்கில் இலங்கைக்கு கிடைத்த பெருமை!

உலக வங்கி மற்றும் S&P சர்வதேச சந்தை புலனாய்வு மற்றும் நிதி சேவை ஆகியவற்றின் வருடாந்த அறிக்கையில் 2021 ஆம் ஆண்டு தொடர்பான இரண்டாவது பதிப்பில் கொழும்பு துறைமுகம் தெற்காசியா மற்றும் இந்திய உப கண்டத்தில் மிக சுறுசுறுப்பாக இயங்கும் துறைமுகம் என தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடல் எல்லைக்குள் இருக்கும் துறைமுகங்களில் மூன்றாவது இடத்திலும், உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22 வது இடத்திலும் கொழும்பு துறைமுகம் தரப்படுத்தப்பட்டுள்ளது.

சமுத்திர துறைமுகம் எப்படி செயற்படுகிறது என்பது ஒரு நாட்டின் சர்வதேச வர்த்தகத்தின் முக்கியமான அங்கம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தின் முனையங்கள் குறிப்பாக கொள்கலன்கள் கப்பல்களுக்கு ஏற்றப்படுவது தாமதமாகுதல், விநியோக சீர்குலைவு, மேலதிக செலவுகள் மற்றும் போட்டித் தன்மை குறைந்துள்ளமை என்பன துரதிஷ்டவசமானவை.

கொழும்பு துறைமுகம் உலகில் பெறுமதியான கேந்திர மையத்தில் இருந்தாலும் பல்வேறு துறைமுகங்களின் செயல் திறனை ஒப்பிடும் போது நம்பகமான, நிலையான மற்றும் ஒப்பிடக் கூடிய அடிப்படைகள் இல்லாததே துறைமுகத்தின் முன்னேற்றம் தொடர்பாக எதிர்நோக்கப்படும் முக்கிய சவால் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 7 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை 7 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை இரவு 10.00 மணிமுதல் நாளை மறுதினம் அதிகாலை 5 மணிவரை நீர்விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

அதன்படி, எத்துல்கோட்டே, பத்தேகம, மிரிஹானை, மாதிவெல, உடஹாமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொடை, பாகொட – விஜேராம ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வவுனியாவில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்!

இன்று (03) மதியம் வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் இருந்து தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் பூவரசன்குளம், நித்தியநகர் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியை நிறுத்திவிட்டு தாய் கச்சான் அறுவடை செய்து கொண்டிருந்த போது விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

கச்சான் அறுவடை செய்து கொண்டிருந்த தாயார் சிறுமியை காணவில்லை என தேடிய போது சிறுமி தண்ணீர் தொடர்டியில் விழுந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியை மீட்டு பூவசரன்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே சிறுமி மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த கிருசாந்தன் தட்சாயினி என்ற 3 வயது சிறுமியே இவ்வாறு மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று நள்ளிரவு அதிகரிக்கப்படவுள்ள தொலைத்தொடர்பு வரி

இலங்கையில் இன்று(03)வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய குறித்த வரியானது, 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்வாட்ச் விற்பனை- கெத்து காட்டும் ஆப்பிள்

பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் பற்றிய கவலைகள் இருந்த போதிலும், குளோபல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் டிராக்கரின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் 13 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து ஆப்பிள் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் 7 தாமதமாக அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆப்பிள் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் பிரபலம் அடைந்ததன் காரணமாக சாம்சங் நிறுவனம் இரண்டாவது இடத்தை உறுதிப்படுத்தி உள்ளது. ஹவாய், சியோமி மற்றும் கார்மின் ஆகியவை முறையே 3, 4 மற்றும் 5 வது இடங்களை பெற்றுள்ளன. மற்ற ஸ்மார்ட்வாட்ச் நிறுவனங்களான அமேஸ்பிட் 4 சதவீத வளர்ச்சி உடன் 6-வது இடத்தில் உள்ளது.

முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் அதிக வளர்ச்சி கண்டு ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக அமைந்ததற்கு முக்கிய காரணமாக கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் அமைந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தென் கொரியாவை சேர்ந்த ஹவாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் 10.1 சதவீத வளர்ச்சியைக் கண்டதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் தாக்கம் இந்த முதல் காலாண்டில் தெரியவில்லை என்றும், அதன் பாதிப்பு இரண்டாம் காலாண்டில் எதிரொலிக்கும் என்பதால் பல நிறுவனங்கள் அடுத்த காலாண்டில் வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரசிகர்களுடன் படம் பார்த்த விக்ரம் படக்குழு

இன்று (03) லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் திரையரங்குகளில் இன்று வெளியாகி இருக்கும் விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் ரசிகர்களுடன் அமர்ந்து விக்ரம் படத்தை பார்த்து ரசித்தனர்.

திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினரை ரசிகர்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ரணிலுடன் கைகோர்க்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் 43 ஆவது படைப் பிரிவின் தலைவருமான சம்பிக்க ரணவக்க அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும் போது ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயேச்சையாக செயற்பட தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சஜித் பிரேமதாசவிற்கும் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒப்பந்தமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், சம்பிக்க சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராகி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் 21ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்ற ப்பட்டவுடன சம்பிக்க உள்ளிட்ட 43ஆவது படைப் பிரிவு பகிரங்கமாக ரணிலுடன் இணையவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.

கனடாவில் கருணைக்கொலை செய்யப்படும் உயிரினங்கள்

0

கனடா முழுவதிலும் இரண்டு மில்லியன் பறவைகள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியூபெக் மாகாணத்தின் ஒரு பகுதியான Magdalen Islands என்னும் தீவில், ஏராளம் உயிரிழந்த பறவைகள் கரையோரமாக ஒதுங்கிக் கிடக்கின்றன. அதற்குக் காரணம் H5N1 என்னும் பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூவென்சா வைரஸ் தொற்று என தெரிவிக்கப்படுகிறது.

இந்த H5N1 என்னும் பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூவென்சா வைரஸ் தொற்று, ஐரோப்பாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த பறவைகள் மூலம் வட அமெரிக்காவுக்குள் நுழைந்திருக்கலாம் என்கிறார் கால்நடை மருத்துவ நிபுணரான பேராசிரியர்

புதிதாக ஒரு வைரஸ் ஓரிடத்தில் நுழையும்போது, அங்கிருக்கும் கால்நடைகளுக்கு அந்த வைரஸுக்கெதிரான நோயெதிர்ப்பு சக்தி இருக்காது. ஆகவே, அந்த வைரஸ் மிக பயங்கரமாக பரவும் என்கிறார் அவர். ஆக, காட்டிலிருக்கும் பறவைகளைத் தொற்றும் அந்த வைரஸ், அந்தப் பறவைகள் மூலம் நாட்டுக்குள்ளிருக்கும் பறவைகளுக்குப் பரவும்.

அவை பரவுவதைத் தடுக்க ஒரே வழி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறவைகளைக் கொல்வதுதான். ஆகவேதான், கனடா முழுவதிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் சுமார் இரண்டு மில்லியன் பறவைகள் கொல்லப்பட்டுள்ளன.

இன்றைய மின் வெட்டு அட்டவணை

இன்று(3)வெள்ளிக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மின்வெட்டு தொடர்பான அட்டவணையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version