Home Blog Page 6

புகையிரதத்தில் மோதி உயிரிழந்த இரண்டு காட்டுயானைகள்..!

ஹபரனை பிரிவின் 120 ஆம் கட்டை – தல்பந்தகந்தை பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இரண்டு காட்டுயானைகள் உயிரிழந்துள்ளன.

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற தொடருந்து ஒன்றுடன் காட்டுயானைகள் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் மற்றுமொரு யானை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து காரணமாக கொழும்பு – ஹபரனைக்கு இடையிலான தொடருந்து போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் ஹபரனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று மாலை கடல் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்

நேற்று மாலை 3 மணியளவில் மன்னாரில் கடல் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 7 மீனவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் – பேசாலையிலிருந்து கடலுக்குப் புறப்படத் தயரான படகுகளைக் கடற்படையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது கடற்படையினருக்கும் மீனவர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது கடற்படையினர் மீனவர் ஒருவர் மீது கடும் தாக்குதல் மேற்கொண்டதால் பாதிப்படைந்த மீனவர் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்பின்பு மீனவர்கள் கடற்படையினரிடம் மன்னிப்புக் கோரி சமரசத்தின அடிப்படையில் தொழிலுக்குச் சென்றனர்.

இவ்வாறு தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மாலை 5.30 மணியளவில் தலைமன்னார் கடற்பரப்பில் தொழிலில ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அவ்விடத்துக்குப் படகில் வந்த கடற்படையினர் மீனவர்களை மீண்டும் சோதனைக்கு உட்படுத்தியதோடு படகுகளுடன் தீடைக்குக் கொண்டு செல்ல முற்பட்டனர்.

வேண்டுமானால் எம்மைக் கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லுங்கள். எதற்கு யாருமே அற்ற தீடைக்குக் கொண்டு செல்கின்றீர்கள்? என மீனவர்கள் கேள்வி எழுப்பியபோதும் அதற்குச் செவிசாய்க்க மறுத்த கடற்படையினர் மீனவர்களைத் தீடைக்குக் கொண்டு சென்றனர்.

தீடையில் இறக்கிய மீனவர்களை மீண்டும் சோதனை செய்ததோடு உடல் பரிசோதனைகளையும் முன்னெடுத்த சமயம் பேசாலையில் முரண்பாடு ஏற்பட்டபோது பிடிக்கப்பட்ட காணொளி படத்தின் மூலம் மீனவர்களை இனங்கண்டு ஆறு மீனவ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனப் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.

தீடையில் தாக்கப்பட்ட 6 மீனவர்களும் ஏனைய மீனவர்களின் உதவியுடன் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக மீனவர் சங்கங்கள், பங்குத் தந்தை ஆகியோர் கடற்படையின் உயர் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும் தீர்வு கிட்டவில்லை.

கோரிக்கையை நிறைவேற்றப்படாவிடின் பிரதமர் மற்றும் நிதியமைச்சர்பதவிகளில் இருந்து விலகுவேன் (ஜனாதிபதிக்கு எச்சரிக்கை )

இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்து தனது நண்பரான தினேஸ் வீரக்கொடிக்கு பதவியை வழங்குமாறு பிரதமர் கடந்த வாரம் அரச தலைவரை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.

தனது கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளில் இருந்து விலகுவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கோட்டாபய தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் அதனைச் ஒரு போதும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அரச தலைவரின் இந்த நிலைப்பாட்டை ஆட்சேபித்துள்ள ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் மற்றும் பிரதமர் பதவிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

விக்ரமசிங்கவின் இந்த பதிலால் அரச தலைவர் கோபமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச தலைவருக்கும் பிரதமருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ராஜபக்ச குடும்பத்தின் உறவினர் திருகுமார் நடேசனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருகுமார் நடேசன் பிரபல தொழிலதிபர் மற்றும் நிருபமா ராஜபக்சவின் கணவர் ஆவார்.அண்மையில் திருகுமார் நடேசன் டுபாயில் இருந்தபோது ரணில் விக்ரமசிங்க அவரை அழைத்து தனக்கும் அரச தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்படி, நாட்டிற்கு வருகை தந்த திருகுமார் நடேசன் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் நடேசன் அவர்களும் கலந்துகொண்டதாக அறியமுடிகிறது.

வாழைப்பழம் அதிகம் சாப்பிடுவதால் உண்டாகும் பிரச்சனைகள்!

வாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது.

வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளது, அதை குறைக்க மாற்ற பழங்களோடு கலந்து சாப்பிடலாம். உதாரணமாக ஆரஞ்சு, துண்டுகளாக்கப்பட்ட தர்பூசணி, ஒரு கப் திராட்சை போன்ற பழங்களோடு சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் ஒற்றைத்தலைவலி, சுவாசப் பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனைகள், நரம்புப் பிரச்சனைகள், ரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருந்தால் வரும் ஹைபர்கலீமியா, பற்சிதைவு, சோம்பல், மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவை உண்டாகும்.

ஆஸ்துமா மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும், வாழைப்பழம் அதிகம் உட்கொள்பவர்களுக்கும் ஒரே மாதிரியான ஒவ்வாமை அறிகுறிகள் உள்ளது.

அவை மூக்கு ஒழுகுதல், மூச்சிரைப்பு, இருமல், தொண்டை எரிச்சல், கலங்கிய கண்கள் போன்ற பொதுவான ஒவ்வாமைகள் உண்டாக முதன்மையான காரணமான இந்த வாழைப்பழம் சாப்பிடுவது இருக்கிறது.

சிறுநீரக பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் உண்பதை குறைக்கவும். ஏனெனில் வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இதனால் உங்கள் சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும். இது ஆபத்தை விளைவிக்கும்.

நீங்கள் ஒவ்வொரு முறையும் வாழைப்பழம் அல்லது அதற்கு இணையான சத்துக்கள் கொண்ட வேறொரு பழத்தை சாப்பிடும்போது மூச்சுத் திணறுதல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டால் உங்களுக்கு ஒவ்வாமை உள்ளது என்று அர்த்தம்.

சூப்பரான பப்பாளிக்காய் கூட்டு!

தேவையான பொருட்கள் :

பப்பாளிக்காய் (சிறியது) – ஒன்று

தேங்காய் துருவல் – கால் கப்

பச்சை மிளகாய் – 2

சீரகம் – ஒரு டீஸ்பூன்

பாசிப்பருப்பு – ஒரு கப்

கறிவேப்பிலை – சிறிதளவு

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பாசிப்பருப்பை தனியாக வேக வைக்கவும்.

தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் நைசாக அரைத்து கொள்ளவும்.

பப்பாளிக்காயை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும்.

அரைத்த தேங்காய் கலவையை வெந்த பப்பாளிக்காயுடன் சேர்த்து பருப்பும் சேர்க்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து பப்பாளி கலவையில் சேர்த்து கலந்து கொதிக்க வைத்து இறக்கவும்.

இப்போது சூப்பரான பப்பாளிக்காய் கூட்டு ரெடி.

சிவபெருமானின் 19 அவதாரமும் அதன் சிறப்பு!

சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரமும் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இவர் எடுத்த அவதாரத்திற்கு ஒரு முக்கிய காரணம் ஒன்று இருந்தது அது மனிதர்களை தீமைகளில் இருந்து காப்பாற்றும் நோக்கமே ஆகும்.

பிப்லாட் அவதாரம்:

ஒரு துறவியின் வீட்டில் பிறந்தார் சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டைவிட்டு சென்றார் சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாததால் தான் தன் தந்தை வீட்டைவிட்டு சென்றதை வளரும் போதுதான் புரிந்து கொண்டார். இதனால் சனியை பிப்லாட் சபித்து தன் வின் நகை இருப்பிடத்திலிருந்து சனி கிரகத்தை வழிபட செய்தார்.

நந்தி அவதாரம்:

நந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் ஏற்றமாகும். சிவபெருமானை நந்தி வடிவில் இந்தியாவில் பல இடங்களில் தரிசித்து வருகின்றனர். நந்திகளின் பாதுகாவலனாக சிவபெருமான் பார்க்கப்பட்டார்.

வீரபத்ர அவதாரம்:

தட்சிணா யாகத்தில் சதிதேவி தன்னை பலியாக்கி கொண்டதால் சிவபெருமான் கடும் கோபத்திற்கு ஆளானார். தன் தலையிலிருந்து சிறிது முடியை எடுத்து அதை தரையில் போட்டார் அப்போது அதிலிருந்து பிறந்தவர்தான் வீரபத்திர அவதாரம்.

பைரவ அவதாரம்:

பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்று சண்டை வரும்போது சிவபெருமான் இந்த பைரவ அவதாரத்தை எடுத்தார். அப்போது பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவபெருமான் துண்டித்தார். ஒரு பிராமணனை கொன்ற குற்றவுணர்வு சிவபெருமானுக்கு இருந்தது.

அஸ்வத்தாமா அவதாரம்:

பார்கடலை கடையும் பொழுது சிவபெருமான் கொடிய நெஞ்சை உட்கொண்ட அந்த நேரத்தில் அவர் தொண்டை எரிய துவங்கியது. அப்போது சிவபெருமானின் உள்ளிருந்த விஷ்ணு புருஷ் வெளியே வந்தது அதற்கு கடவுள் ஒரு வரத்தையும் அளித்தார். அதன்படி பூமியில் பிறந்து துரோணரின் மகனாக வளர்ந்து எதிர்த்து நிற்கும் சத்திரியர்களைக் கொள்வான் விஷ்ணுபுருஷ்.

ஷரபா அவதாரம்:

ஷரபா வடிவத்தில் உள்ள சிவபெருமான் பாதி பறவையாகவும் பாதி சிங்கமாகவும் இருப்பார். சிவ புராணத்தின் படி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்கவே இந்த அவதாரம் எடுத்தார்.

கிரகபதி அவதாரம்:

விஷ்வனார் என்ற பிராமணரின் வீட்டில் மகனாக பிறந்தார். சிவபெருமான் அவருக்கு கிரகபதி என பெயரிட்டார் விஷ்வணார். பிரகபதிக்கு ஒன்பது வயது ஆன நிலையில் அவர் இறக்கப் போகிறார் என்று நாரதர் கூறினார். பின்பு சிவபெருமானிடம் ஆசி பெற்றதால் அவருக்கு இருந்த தோஷம் விலகியது.

துருவாச அவதாரம்:

அண்ட சராசரத்தில் ஒழுக்கத்தை கடை பிடிப்பதற்காக இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான். துர்வாசா என்பவர் முன் கோபத்திற்கு பெயர் போன மிகப்பெரிய துறவி ஆவார்.

அனுமான் அவதாரம்:

குரங்கு கடவுளான அனுமானும் கூட சிவபெருமானின் அவதாரம்தான் ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு பணிபுரிய இந்த அவதாரத்தை சிவபெருமான் எடுத்துள்ளார்.

ரிஷப அவதாரம்:

பார்க்கடல் கடைதளுக்கு பிறகு கீழோகத்திற்கு சென்றார் விஷ்ணு பகவான் அங்கே ஒரு அழகிய பெண்ணை பார்த்து மயங்கினார். அங்கு தங்கி இருந்த பொழுது விஷ்ணு பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுரன் குணத்தை உடையவனாக இருந்தனர். அனைத்து கடவுள்களையும் மனிதர்களையும் ஒரே மாதிரியான தொல்லைகளை அளித்து வந்தனர் அப்பொழுது காளை அல்லது ரிஷப வடிவத்தை எடுத்து அனைத்து கொடிய மகன்களையும் கொன்றார்.

யாதிநாத் அவதாரம்:

ஒரு முறை பழங்குடி சேர்ந்த ஒருவன் வாழ்ந்து வந்தான் அவனும் அவன் மனைவியும் தீவிர சிவ பக்தர்கள் ஆவார்கள் ஒரு முறை யாகித் வடிவில் சிவபெருமான் சந்தித்தார் அவர்கள் இருக்கக்கூடிய சின்ன குடிசையில் விருந்தாளிகளை தங்க வைத்து தாங்கள் இரண்டு பேரும் வெளியே படுக்க தீர்மானித்தான் ஆனால் அன்று இரவு வன விலங்குகளால் கொல்லப்பட்டார் அப்போது அவர் மனைவி சாக நினைத்தால் தனது உருவத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவளுக்கு ஒரு வரமளித்தார் அதன்படி அவளும் அவள் கணவனும் மீண்டும் மண்ணில் பிறப்பர்.

கிருஷ்ண தர்ஷன் அவதாரம்:

ஒருவர் வாழ்க்கையில் யாகம் மற்றும் சடங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.

விசு வரியா அவதாரம்:

அனைத்து விதமான ஆபத்துகளிலிருந்து மனிதனை காக்கவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.

சுரேஷ்வர் அவதாரம்:

தனது பக்தர்களை சோதிக்க இந்திரன் வடிவில் உருவெடுத்தார் சிவபெருமான் அதனால் தான் அவரை சுரேஷ்வரர் என்று அழைக்கிறோம்.

கீரத் அவதாரம்:

அர்ஜுனன் தவத்தில் இருந்த பொழுது கீரத் அல்லது வேட்டைக்காரன் உருவம் எடுத்தார். சிவபெருமான் அர்ஜுனனை கொல்ல மூக்கா என்ற அரக்கனை அனுப்பி வைத்தார் துரியோதனன் காட்டு பன்றி போல தன்னை மாற்றிக்கொண்டான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த அர்ஜுனனின் கவனம் ஒரு பெரிய சத்தத்தால் சிதறியது அவன் கண்ணைத் திறந்து பார்த்தான் காட்டு பன்றியை அர்ஜுனனு சன் அம்புகளால் வீழ்த்தினார்கள் யார் அந்த காட்டுப்பன்றியை முதலில் வீழ்த்தியது என்ற சந்தேகம் அர்ஜுனனுக்கும் கீரதுக்கும் இடையே வந்தது.

சுண்டன் தர்கா அவதாரம்:

திருமணத்தின் போது பார்வதி தேவியின் தந்தை இமாலயாவிடம் பார்வதியின் கரத்தை பிடிக்க அவர் இந்த அவதாரத்தை எடுத்தார்.

பிரமச்சாரி அவதாரம்:

சிவபெருமானை கணவனாக அடைய சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.

எக்ஷெக்வர் அவதாரம்:

கடவுள்கள் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகம்பாவங்களை ஒழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான்.

அவதுட் அவதாரம்:

இந்திரனின் திமிரை ஒழிக்கவே இந்த அவதாரத்தை சிவபெருமான் எடுத்தார்.

இன்றைய நாளுக்கான ராசி பலன் (04-06-2022)

மேஷம் :

அசுவினி: உங்கள் எண்ணத்தை பிறரால் புரிந்து கொள்ள மாட்டார்கள். குடும்பத்திலும் பிரச்னையை சந்திப்பீர்கள்.
பரணி: எதிர்பார்த்தவற்றில் ஏமாற்றம் அடைவீர்கள். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வர்.
கார்த்திகை 1: குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எதிர்பார்த்த நன்மை கிடைக்காமல் போகும்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4: உங்களுடைய ஆலோசனைக்கு மதிப்பு உண்டாகும். பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள்.
ரோகிணி: செயல்களில் இருந்த நெருக்கடி விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: தொழிலில் இருந்த பிரச்னை விலகும். குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3, 4: எதிர்பாராத நஷ்டங்கள் உண்டாகலாம். நிதானித்து செயல்படுவது நல்லது.
திருவாதிரை: செலவுகள் அதிகரிக்கும். வார்த்தைகளில் கவனமும் எச்சரிக்கையும் தேவை.
புனர்பூசம் 1, 2, 3: செயல்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சி எதுவும் வேண்டாம்.

கடகம் :

புனர்பூசம் 1, 2, 3: மனம் மகிழும் வகையில் சம்பவம் நடைபெறும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள்.
பூசம்: சிந்தித்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். செலவுகள் கட்டுப்படும். எதிர்பாராத வரவு உண்டாகும்.
ஆயில்யம் உங்களுடைய அனுகுமுறையை மாற்றி செயல்படுவீர்கள். பெரியோரின் ஆதரவும் ஆசியும் உண்டாகும்.

சிம்மம் :

மகம்: எதிர்பாராத செலவுகளால் சங்கடப்படுவீர்கள். திட்டங்கள் தீட்டி செயல்படுத்த முயற்சிப்பீர்கள்.
பூரம்: தொழிலில் எதிர்பார்த்த நன்மை கிடைக்காது. உங்கள் கவனம் இன்று தடுமாறும்.
உத்திரம் 1: அரசு வகையிலான முயற்சி தள்ளிப்போகும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

கன்னி :

உத்திரம் 2, 3, 4: எண்ணம் இன்று நிறைவேறும். வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பணவரவு கூடும்.
அஸ்தம்: கனவுகள் இன்று நிறைவேறும். எதிர்பாராத பணவரவால் சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள்.
சித்திரை 1, 2: முயற்சிகள் இன்று வெற்றியாகும். கடன்களை அடைப்பீர்கள். பொன் பொருள் வந்து சேரும்.

துலாம் :

சித்திரை 3, 4: திட்டமிட்டு தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும்
சுவாதி: வேலை தேடும் முயற்சியில் தீவிரமாவீர்கள். குலதெய்வ வழிபாட்டால் எண்ணம் நிறைவேறும்.
விசாகம் 1, 2, 3: உற்சாகத்துடன் செயல்பட்டு வருவீர்கள். எதிர்பாலினரிடம் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம் :

விசாகம் 4: பிரச்னைகள் இன்று முடிவிற்கு வரும். குருவருளால் நினைத்தவற்றில் வெற்றி காண்பீர்கள்.
அனுஷம்: தடைகளைத் தாண்டி சாதிப்பீர்கள். மற்றவர்களால் முடியாத ஒன்றை நீங்கள் முடித்துக் காட்டுவீர்கள்.
கேட்டை: பிரச்னையை லாவகமாக கையாள்வீர்கள். சொத்தில் இருந்த வில்லங்கம் தீரும். அதிர்ஷ்டமான நாள்.

தனுசு :

மூலம்: நிதானம் அவசியம். யோசித்து செயல்படுவதால் சங்கடங்கள் ஏற்படாமல் போகும்.
பூராடம்: தாய்வழி உறவுவிஷயத்தில் சங்கடத்தை சந்திப்பீர்கள். எதிர்பார்த்ததை அடைய முடியாமல் போகும்.
உத்திராடம் 1: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எதிரிகளால் சங்கடங்களுக்கு ஆளாகலாம். கவனம் தேவை.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: புதிய பொருள் வாங்குவீர்கள். குடும்ப நலனில் கவனம் செல்லும். மகிழ்ச்சியான நாள்.
திருவோணம்: தம்பதிகளுக்கிடையே பிரச்னை தீரும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.
அவிட்டம் 1, 2: எதிர்பாலினரால் தடுமாற்றம் ஏற்படும். திட்டமிட்ட பணிகளை தள்ளிப் போடுவீர்கள்.

கும்பம் :

அவிட்டம் 3, 4: எதிர்ப்பை முறியடித்து சாதிப்பீர்கள். முயற்சி வெற்றி பெறும். உங்கள் நிலை உயரும்.
சதயம்: குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அலட்சியம் செய்தவர்கள் இன்று உங்களைப் பாராட்டுவர்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். குழந்தைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

மீனம் :

பூரட்டாதி 4: வேலைப்பளு அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும்.
உத்திரட்டாதி: பணியாளர்களுக்கு புதிய சுமை உண்டாகும். பணியில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.
ரேவதி: உறவுகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

வரலாற்றில் இடம்பிடித்தார் இரண்டாம் எலிசபெத் மகாராணி

உலகில் அதிக காலம் கிரீடம் சூடிய மகாராணியாக இரண்டாம் எலிசபெத் மகாராணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

அவர் கிரீடம் தரித்து இன்றுடன் 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இரண்டாம் எலிசபெத் மாகாராணியார் 1952 ஆம் ஆண்டு தனது 25 ஆவது வயதில் கிரீடம் சூடினார்.

அவரது தந்தையான ஆறாவது ஜோர்ஜ் மன்னர் 1952 ஆம் ஆண்டு மரணித்ததன் பின்னர் பிரித்தானிய மகாராணியாக இரண்டாம் எலிசபெத் தெரிவானார்.

அவர் மாகாராணியாக தெரிவாகி இன்றுடன் 70 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பிரித்தானியாவில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மாகாராணியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பின்னர் அதற்கான வைபவம் ஆரம்பமானது.

சாதாரண கதை என கூறி லோகேஷின் கதையை நிராகரித்த பிரபல நடிகர்!

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நடிப்பில் இன்று வெளியாகியுள்ள விக்ரம் திரைப்ப்டத்தை இயக்கி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸிடம் கதை கூறியதாகவும் இதனை அவர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதை சாதரணமாக இருப்பதாக கூறி இதனை நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பை பெறும் தமிழ்ப்பெண்!

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்னடாா் கிராமத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா் சு. பாஸ்கரன் – ஆசிரியை தையல்நாயகி தம்பதியின் மூத்த மகள் சுபிக்சா என்பவருக்கு இந்த வய்ப்பு கிட்டியுள்ளது.

சுபிக்சா பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் படித்தவா். 2021ஆம் ஆண்டில் லண்டனுக்கு சென்ற அவா் அங்கு, லண்டன் யுஎஸ்ஏவில் எம்.எஸ் படித்து வந்தாா்.

படிக்கும்போதே லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அணுசக்தி நிறுவனம் ஒன்றின் பொறியாளராக தோ்வாகி பணி வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டசாலியானார் சுபிக்சா.

படிக்க சென்ற நிலையில் பணி வாய்ப்பையும் பெற்று மகிழ்ச்சியோடு பணியாற்றி வரும் சுபிக்சா தமிழகத்திற்கே பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, மேல்படிப்பை லண்டனில் தொடா்ந்த நிலையில் அங்குள்ள அணுசக்தி நிறுவனத்தில் பொறியாளராக பணி வாய்ப்பை பெற்றுள்ள அவருக்குப் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

Exit mobile version