பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இன்னும் திரும்பாததால், அப்பகுதி மக்களிடையே பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், இலங்கை கடற்தொழில் மற்றும் நீரியல் மூலவளங்கள் அமைச்சர் சந்திரசேகர் அப்பகுதிக்கு நேரில் சென்று, காணாமல் போன மீனவர்களின் உறவினர்களையும் சக கடற்தொழிலாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, கடற்தொழில் அமைச்சர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்தார். காணாமல் போன மீனவர்களுக்கு வங்கிப் பாக்கிக் கடன்கள் இருந்தால், அவற்றை செலுத்துவதற்குரிய அல்லது தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை அமைச்சரவை முன்னெடுக்கும் என்றும், படகுகள் மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்திருந்தால், அவற்றைச் சீரமைத்துத் தருவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
காணாமல் போன மீனவர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்புகளும் பெற்றுத் தரப்படும் என்றும் உறுதியளித்தார். இந்த அரசாங்கமும் கடற்தொழில் அமைச்சும் எப்போதும் பாதிக்கப்பட்டவர்களுடனேயே இருக்கும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றும் ஆறுதல் கூறினார்.
மீனவர்களின் நிலை குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், கடற்தொழில் அமைச்சர் அது குறித்துப் பேசுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்னிலங்கையில் இதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்றது. அச்சம்பவம் நடந்து ஆறு மாதங்களுக்க


































