பிந்திய செய்திகள்

ஹென்றி நோவாக் படுகொலை: பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அங்கீகாரம் செலுத்தியது

18 வயதான ஹென்றி நோவாக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது பெற்றோர் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு சென்றபோது, அவர்கள் மிகவும் உணர்ச்சிகளை அனுபவித்தனர். ஹென்றியின் பெற்டோர், ஹவுஸஸ் ஆஃப் பார்லிமென்ட் வளாகத்திற்கு விஜயம் செய்தபோது, கெமி பேடனோச் மற்றும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது பொதுமக்கள் அரங்கிலிருந்து நாடாளுமன்ற அமர்வை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஹென்றியின் பெற்டோர், தங்கள் மகனின் மரணம் குறித்து எம்.பி.க்கள் மரியாதையுடன் பேசுவதை கேட்டு உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் அரசின் சார்பில் பேசிய அலன் கேம்ப்பெல் மற்றும் எதிர்க்கட்சி தரப்பைச் சேர்ந்த ஜெஸ்ஸே நார்மன் ஆகியோர் ஹென்றிக்கும் அவரது குடும்பத்தின் உறுதியான மனநிலைக்கும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த சம்பவம், ஹென்றி நோவாக் கொலை விவகாரத்தைத் தாண்டி, பிரிட்டனில் காவல்துறை மீதான நம்பிக்கை மற்றும் சமூக ஒற்றுமை குறித்த விவாதங்களையும் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. பிரிட்டனில் “இரு அடுக்கு காவல் நடைமுறை” (Two-tier policing) இருப்பதாக நைஜல் ஃபாராஜ் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். இன சிறுபான்மையினரிடம் காவல்துறை மென்மையாக நடந்து கொள்கிறது என்ற அவரது கருத்துக்கு பல எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் “அதை கண்டியுங்கள்”, “அவமானம்” போன்ற முழக்கங்கள் எழுந்ததுடன், கூச்சல் மற்றும் எதிர்ப்பும் நிலவியது. மேலும், சவுதாம்ப்டன் பகுதியில் வெளிப்பட்டுள்ள மக்கள் அதிருப்தி, காவல்துறையின் மீது நம்பிக்கை குறைந்தால் மேலும் மோசமடையக்கூடும் என ஃபாராஜ் எச்சரித்துள்ளார். இந்த சம்பவம், பிரிட்டனில் காவல்துறை மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்த வ

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts