உகாண்டாவும் கொங்கோ ஜனநாயகக் குடியரசும் இருபுறமும் கொண்ட எல்லைப்பகுதியில் எபோலா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லையை மூடி வைக்கப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் முற்றிலும் முடங்கி விட்டது. உகாண்டாவுக்குள் பரவாமல் தடுக்கும் நோக்கில், அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக, எல்லைப்பகுதியில் தங்கியிருந்த நூற்றிக்கணக்கான சரக்கு லொறிகள், இருபுறமும் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து தேங்கி நிற்கின்றன. இந்த லொறிகளில் உள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் மற்ற எளிதில் அழுகக்கூடிய உணவுப் பொருட்கள் பல நாட்களாக காத்திருப்பதால், லொறிகளிலேயே அழுகி வீணாகி வருகின்றன.
இதனால், இரு நாட்டு வர்த்தகர்களும் பெரும் கவலையுடன் இருப்பதாகக் கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் எபோலா வைரஸ் தாக்குதல் மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அரசுகள் கூறுகின்றனர்.


































