உலகக் கிண்ண கால்பந்து போட்டி 2026 க்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஈரான் கால்பந்து அணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளதாக ஈரான் அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் 11 அன்று தொடங்கவிருக்கும் உலகக் கிண்ண போட்டிக்கு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
கடந்த மே 18 முதல் துருக்கியின் அந்தால்யா நகரில் பயிற்சி முகாமில் ஈடுபட்டுள்ள ஈரான் நாட்டு வீரர்களுக்கு வெள்ளிக்கிழமை தாமதமாக விசாக்கள் வழங்கப்பட்டதாக துருக்கிக்கான அமெரிக்கத் தூதுவர் டாம் பராக் தெரிவித்தார். ஆனால், இந்த அறிவிப்புக்கு துருக்கியில் உள்ள ஈரான் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மெஹ்தி தாஜ், பொதுச்செயலாளர் ஹெதயத் மோம்பினி, ஊடக இயக்குநர் மொஹ்சென் மொடமெட்கியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு வேண்டுமென்றே அமெரிக்கா விசா மறுத்துள்ளதாக ஈரான் தூதரகம் சாடியுள்ளது.
அமெரிக்காவின் இந்த அரசியல் கலந்த பாரபட்சமான நடவடிக்கை சர்வதேச விளையாட்டு விதிகளுக்கு எதிரானது என்றும், இந்த விவகாரத்தை உலக கால்பந்து நிர்வாக அமைப்பான பிஃபாவிடம் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ஈரான் கால்பந்து கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் அண்மையில் ஏற்பட்ட போர் பதற்றங்கள் காரணமாக, ஈரான் அணி தனது தங்குமிடத்தை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவின் திஹுவானா நகருக்கு மாற்றியிருந்தது.
விசா கிடைக்கப் பெறாத நிர்வாகிகள் தற்போதைக்கு அணியினருடன் மெக்சிகோ பயணிக்கும் வேளையில், அவர்களுக்கான விசாவைப் பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகக் கிண்ணத் தொடர


































