பிந்திய செய்திகள்

தமிழர்களின் மனவேதனைகளும் உணர்ச்சிகளும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தப்படுவது தவறில்லை

தமிழ் மக்களின் வலிகளையும், உணர்வுகளையும் இசைப்பாடல்கள் மூலம் வெளிப்படுத்துவது குற்றமல்ல. ஆனால், அத்தகைய பாடல்களைப் பாடிய கலைஞர் ஒருவர் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, சட்டத்தரணி வி. மணிவண்ணன் கருத்துக்களை வெளிப்படுத்தினார். குவியம் நிறுவனம் ஏற்பாடு செய்த இலங்கை தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கிடையேயான துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் அவர் இது தொடர்பாகப் பேசினார்.

இந்த துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் கலைஞர்களில் ஒருவர் இன்று சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழ் மக்களின் வலிகளையும், உணர்வுகளையும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்த முயன்ற ஒரு இளைஞன் இன்று சிறைக்கம்பிகளின் பின்னால் அவதிப்படுகிறார். பயங்கரவாத தடை சட்டம் ஒரு பயங்கரமான சட்டம், இது உலகின் மனசாட்சியையே உலுக்கும் சட்டம். இந்த சட்டத்தின் கீழ் கலைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

பாடல்களைப் பாடுவது பயங்கரவாதம் அல்ல, ஆனால் பேசும் விடயங்கள் இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்துமானால் அது குற்றமாகும். இந்த நாட்டில் எது பயங்கரவாதம் என்பதைத் தீர்மானிப்பது பொலிஸார் தான். ஒரு வார்த்தை அல்லது வரி இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் என்றால், பொலிஸார் கைது செய்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் முற்படுத்துவார்கள்.

பயங்கரவாத தடை சட்டம் நீதிமன்றங்களையும் கட்டி வைத்துள்ளது. பொலிஸார் நீதிமன்றத்தில் முற்படுத்தினால், நீதிமன்றம் பிணையில் விடுவிக்கும் அதிகாரம் இல்லை. ஊடகவியலாளர் திசநாயக்கவுக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கருத்து இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தியதா, வன்முறையைத் தூண்டியதா என்பதைப் பற்ற

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts