பிந்திய செய்திகள்

பாடல் பாடியமைக்காக நீதிமன்றம் எவரையும் கைது செய்ய முடியாது – டக்ளஸ் தேவானந்தா கடும் கருத்து

புலிகளுடன் தொடர்புடைய ஒரு பாடலை பாடியதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சங்கீர்த்தனனை விடுவிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டுள்ளார்.

தவறான அல்லது சுயலாப அரசியல் வழிநடத்தல்களுக்கு எடுபட்டு உணர்வு பூர்வமான சில விடயங்களை தவறாக புரிந்து கொண்டு சொல்லவோ, எழுதவோ அல்லது பாடவோ முற்படுவதை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ளாக்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோன்று ஒரு நிகழ்வில் பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட ரீசேட் ஒன்றை அணிந்து நடனமாடிய ஒரு இளைஞன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்து அவர் கூறியுள்ளார்.

அந்த இளைஞனின் தாயார் தன்னிடம் வந்து நிலைமையை கூறி தனது கவலையை வெளிப்படுத்திய நிலையில், அவர் பொலிசாரிடம் தொடர்பு கொண்டு தயவுசெய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவ்விடையத்தை கொண்டு செல்லாது சாதாரண சட்டங்களின் கீழ் அவ்விடயத்தை பார்க்க வேண்டும் என்று எடுத்துரைத்ததுடன், அந்த இளைஞன் தவறான வழிநடத்தலால் தான் அவ்வாறு மேற்கொண்டுவிட்டார் என்பதையும் சுட்டிக்காட்டி அவருக்கு பொது மன்னிப்பு கொடுத்து விடுவிக்குமாக கோரியிருந்தார். அதேபோன்று தற்போது யாழ்ப்பாணத்தில் மத்தியில் இருக்கும் ஆட்சியைச் செர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

இன்றைய ஆட்சியாளர்கள் கூட வடக்கில் தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக தமது தேர்தல் மேடைகளில் இவ்வாறான பாடல்களை ஒலிபரப்பிய அல்லது பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னெடுத்ததாக பல பதிவுகள் இருக்க

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts