பிரித்தானியாவின் லண்டனிலுள்ள விமான நிலையம் ஒன்றில் தரையிறங்கிய விமானத்தின் சக்கரத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரையிறங்கிய சவுதி அரேபிய விமானம் ஒன்றிலேயே நடந்தது. மொராக்கோவின் Tangier நகரிலிருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்த Air Arabia Maroc நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் பற்றி பிரித்தானியாவின் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக நுழையும் நோக்கில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











































