பிந்திய செய்திகள்

யாழ்ப்பாண மறைமாவட்டத்துக்கு புதிய ஆயர் நியமித்து வத்திக்கான் அறிவிப்பு

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக ஆண்டகை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார். இது திருத்தந்தை பிரான்சிஸால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிய வந்துள்ளது.

இவர் முன்பு கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும், மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் பணியாற்றியுள்ளார். 1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர், பல மறைமாவட்டங்களிலும் சமய, கல்வி மற்றும் நிர்வாகப்பணிகளை ஆற்றியுள்ளார்.

உரோமில் இறையியல் பட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம், ஐக்கிய இராச்சியத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டம், மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமானி பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இவர் கொழும்பு இறையியல் கல்லூரியில் தமிழ் பிரிவுக்கு பொறுப்பாளராகவும், பல கல்லூரிகளில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இலங்கையில் தேசிய கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழுவின் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

ஜூலை 2020இல் கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்ட இவர், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரின் ஓய்வுக்குப் பின்னர் அங்கு அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் பொறுப்பேற்றார். யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள இவரது நியமனி அறிவிப்பு, யாழ் மறைமாவட்டத்தின் இணை பேராலய ஆலயத்தின் மணி ஒலிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக வெளியானது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts