இன, மத பிளவுகளை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய கடந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அனைத்து இன மக்களும் இணைந்து வாழக்கூடிய ஒழுக்கமான மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இன, மத பிளவுகளை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய காரணங்கள் இன்று கடந்த காலம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன, மத பிளவுகள் நாட்டின் பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தின் 76ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.