Home Blog Page 15

நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

நாளை மாலை முதல் நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளைய தினம் 50,0000 (12.5 kg, 5kg & 2.3kg) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக எரிவாயு விநியோகத்தை லிட்ரோ நிறுத்தி வைத்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ வாகனம் ஒன்றும் பால் கொண்டு சென்ற வாகனமும் மோதி
சாரதிகாயம் அடைந்துள்ளார்

இன்று காலை நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியில் இராணுவ வாகனம் ஒன்றும் பால் கொண்டு சென்ற வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துடன் ஆயிரக் கணக்கான லீட்டர் பாலும் வீதியில் கொட்டுப்பட்டது.

இந்த விபத்து சம்பவம் நெடுகேணி பகுதியிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கிச் சென்ற இராணுவ வாகனம், ஒட்டுசுட்டான் சம்மளம்குளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்குள் திடீரென திருப்ப முற்பட்டது.

இந்த நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த பால் கொள்வனவு வாகனம் இராணுவ வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான லீட்டர் பால் வீதியில் சிதறி வீணாகியுள்ளதோடு பால் ஏற்றி சென்ற வாகன சாரதி காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கையில் மற்றுமொரு மாணவி மாயம்!

அம்பாறையில் காணாமல் போன 16 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவதினமான நேற்று மதியம் 2.30 மணியிலிருந்து குறித்த சிறுமி மாயமாகி உள்ளதாக குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் மாலை முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த சிறுமி பலரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த பாடசாலையில் பாதுகாப்பிற்காக நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

மேலும் இச்சம்பவத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் சிறுமி நிந்தவூர் 2 இமாம் கஸ்ஸாலி வீதியை சேர்ந்த 16 வயது வதுர்தீன் பாத்திமா சஜானா என்பவராவார்.

குறித்த சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலையில் சம்பவ தினமான நேற்று பகல் உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர் திடிரென அவர் அங்கிருந்து காணாமல் சென்று விட்டதாக பாடசாலை காப்பாளர் தெரிவித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அநுராதபுரத்தில் பரீட்சை எழுதச் சென்ற மாணவியிடம் மேற்பார்வையாளர் தகாத செயல்!

அநுராதபுர மாவட்டத்திலுள்ள பிரதேசம் ஒன்றின் பாடசாலை மாணவி ஒருவரை பரீட்சை மண்டபத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளார்.

மாணவி க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக கடந்த 25 ஆம் திகதி பரீட்சை எழுதச் சென்றிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவி, ஆசிரியை ஒருவரிடம் தனக்கு நிகழ்ந்தவற்றைக் கூறிய பின்னர் தனது பெற்றோருடன் சென்று கடந்த 26ஆம் திகதி ஹித்தோகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பரீட்சை மேற்பார்வையாளர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் சாணக்கியனிற்கு கூச்சலிட்டு எதிர்ப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உரையாற்றிய போது, காலிமுகத்திடலில் சிங்கள மக்களால் 50, நாட்களாக இடம்பெறும் போராட்டத்திற்கு தமிழர்களும் செல்ல வேண்டும் என்ற கருத்துப்பட பேசியபோது அங்கு இருந்த இளைஞர்களும், பொதுமக்களும் எழுந்து நின்று கூச்சல் போட்டு இங்கு அரசியல் பேசவேண்டாம் இது அஞ்சலி கூட்டம் பேச்சை நிறுத்து என கூ போட்டு எதிர்பு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பான நிலைமையேற்பட்டது.

இந்த சம்பவம் நேற்றையதினம் திருகோணமலையில் நடந்தது. கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களிற்கான அஞ்சலி நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் மாலை 3.00 மணியளவில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இரா.சாணக்கியன், நிகழ்வு மேடையை தனது அரசியல் மேடையாக மாற்ற முயற்சிப்பதாக குறிப்பிட்டு, கலந்து கொண்டிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூட்டத்திலிருந்த இளைஞர்கள் ‘கூ’ சத்தமெழுப்பி சாணக்கியனின் உரைக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதையடுத்து, அவர் உரையை இடையில் ஆற்றிவிட்டு சென்றார்.

அங்கு கலந்து கொண்ட திருகோணமலை தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரிடம் இது தொடர்பாக நிருபர் கேட்டபோது, சாணாக்கியன் வழமையாக ஊடகங்களுக்கே பேசுவார், மக்களுக்காக நடிப்பார் கொழும்பில் சிங்களவர்கள் காலிமுகத்திடலில் ஏன் போராடுகின்றனர் என்பது ஊர் உலகத்துக்கு எல்லாம் தெரியும் அதை அஞ்சலி நிகழ்வில் பேசி தமது வழமையான நாடகத்தை காட்ட வெளிக்கிட்டதை மக்கள் ஏற்கவில்லை என கூறினார்.

சாம்சங் – ஸ்மார்ட்போன் உற்பத்தியை குறைக்கின்றது..?

சாம்சங் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தியை 39 சதவீதம் வரை குறைக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பட்ஜெட் ரக மாடல்கள் மற்றும் ஃபிளாக்‌ஷிப் மாடல்கள் பாதிக்கப்பட இருக்கின்றன.

சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பு குறைவு, மின்சாதனங்களுக்கான தட்டுப்பாடு மற்றும் ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் போன்ற காரணங்களால் சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த ஆண்டு மட்டும் 310 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கையை 280 மில்லியனாக குறைக்க சாம்சங் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முந்தைய ஆண்டை விட பத்து சதவீதம் குறைவு ஆகும்.

ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு உற்பத்தி 35 சதவீதம் சரிவடையும் என ஷின்ஹன் முதலீட்டு நிறுவன ஆய்வாளர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டாவது காலாண்டு உற்பத்தியில் பத்து சதவீதம் வரை சரிவு ஏற்படலாம் என அவர் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய வங்கி இன்றைய டொலரொன்றின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதியை அறிவித்துள்ளது அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 74 சதமாகவும்,

இதேவேளை, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 77 சதமாகவும் பதிவாகியுள்ளது.

மண்ணெண்ணெய்காக காத்திருப்போருக்கு அமைச்சர் கஞ்சன விஜயசேகர கூறிய ஆறுதல் செய்தி

சபுகஸ்கந்த ஆரம்பம்
இலங்கை வந்துள்ள பல சர்வதேச விமானங்கள் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக எரிபொருள் நிரப்புவதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதனால், சுத்திகரிப்பு நிலையப் பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளமையினால் அது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் அதன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும்

இதன்மூலம் நாளாந்தம் 600 முதல் 800 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் மற்றும் விமானத்திற்கான எரிபொருளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த டீசல் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து டீசல் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணெய் உற்பத்தி

மண்ணெண்ணெய்காக காத்திருப்போருக்கு ஆறுதல் செய்தி!

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த மார்ச் 21ஆம் திகதி மூடப்பட்டது. ஆகவே தற்போது இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் தொடங்கப்படுவதால், மின் உற்பத்திக்கான மண்ணெண்ணெய் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் உட்பட எரிபொருட்களை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக சில இடங்களில் பல நாட்கள் காத்திருந்தும் மண்ணெண்ணெய் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் அதன் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளமையினால் எரிபொருளுக்கான நீண்ட வரிசை நீங்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விஜய்யுடன் இணைய விருப்பம் தெரிவித்த கமல்!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. எனவே படத்திற்கான புரமோஷன் வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புரமோஷனுக்காக உலகம் முழுவதும் கமல்ஹாசன் சுற்றி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் மலேசியாவில் நடந்த புரமோஷன் விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்ட போது, செய்தியாளர் ஒருவர், ‘விக்ரம்’ படத்தின் மூன்றாவது பாகத்தில் தளபதி விஜய்யை எதிர்பார்க்கலாமா? என்று கேட்டார். இந்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘விக்ரம் 3’ படத்திற்காக ஏற்கெனவே ஒருவரை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளோம் என்று சூர்யாவை மறைமுகமாக கூறினார். அதே நேரத்தில் விஜய் ஒப்புக் கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாராக உள்ளது என்று கூறினார்.

ஏற்கெனவே ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் கமல்ஹாசனின் இந்த பதிலால் விரைவில் கமல்ஹாசன் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் தொடர்பில் வெளிவந்த தகவல்

சுதந்திரமாக மதிப்பிடும் அமைப்பான அட்வகேற்றா இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான அதிக நட்டத்தை ஏற்படுத்தும் நான்கு நிறுவனங்களில் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனமும் ஒன்றாகும் என கூறியுள்ளது.

இதன் செயல்பாடு காரணமாக பொது நிதி வீணாக விரையமாவதாக அந்த அமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த நிறுவனத்தினை தனியார் மயப்படுத்துவதன் மூலம் மேலும் ஏற்படக்கூடிய நட்டத்தினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும் என அந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த 2021 ஜூலை வரையிலான காலப்பகுதியினில் சுமார் 372 பில்லியன் ரூபா நட்டம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நட்டத்தில் இருந்து மீள்வதற்கு பல பரிந்துரைகள் அட்வகேற்றா அமைப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version