Home Blog Page 2

இன்றைய நாளுக்கான ராசி பலன் (11-06-2022)

மேஷம் : அசுவினி : உங்களுடைய செயலில் இன்று ஆதாயமான நிலை ஏற்படும்.
பரணி : இன்று நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி ஒன்று உங்களை மகிழ்விக்கும்.
கார்த்திகை 1 : நீங்கள் நினைத்ததை இன்று செயல்படுத்தி முடிக்கும் நாள்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4 : வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உங்களை வந்து சேரும் நாள்.
ரோகிணி : தடைகளை எல்லாம் சரி செய்து இன்று முன்னேற்றம் காண்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2 : உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகி சுறு,சுறுப்பாக செயல்படுவீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். அதற்கேற்ற வரவையும் காண்பீர்கள்.
திருவாதிரை : எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு.
புனர்பூசம் 1, 2, 3 : நீண்ட நாள் பிரச்னை ஒன்றிற்கு இன்று முடிவு காண்பீர்கள்.

கடகம் : புனர்பூசம் 4 : தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.
பூசம் : பணியிடத்தில் நெருக்கடிகளை சமாளித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
ஆயில்யம் : உறவினர்களிடம் உண்டான சங்கடம் இன்று விலகும்.

சிம்மம் : மகம் : உங்கள் செயல்களில் இன்று ஆதாயம் அதிகரிக்கும்.லாபகரமான நாள்.
பூரம் : பிரச்னைகளை சரி செய்து புதிய முயற்சியில் இறங்குவீர்கள்.
உத்திரம் 1 : உங்களுடைய திறமையால் போட்டிகளில் வெற்றி காண்பீர்கள்.

கன்னி : உத்திரம் 2, 3, 4 : வரவுகளில் இருந்த தடைகள் அகலும். குடும்பம் உற்சாகத்தில் மகிழும்
அஸ்தம் : கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
சித்திரை 1, 2 : எதிர்பாராத பண வரவு உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.

துலாம் : சித்திரை 3, 4 : குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெறும்.
சுவாதி : குடும்ப நலனுக்காக துணிச்சலான முடிவு ஒன்றை எடுப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3 : உடன் பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பால் ஆதாயம் கூடும்நாள்

விருச்சிகம் : விசாகம் 4 : எதிர்பாராத செலவு உண்டாகலாம். செயலில் கவனம் தேவை.
அனுஷம் : வாழ்க்கைத்துணையுடன் உண்டான பிரச்னை விலகி மகிழ்ச்சியை காண்பீர்கள்.
கேட்டை : குடும்பத்தில் சுப நிகழ்ச்சி குறித்த பேச்சு உண்டாகும்.நன்மையான நாள்.

தனுசு : மூலம் : நிதி நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். திடீர் வரவால் மகிழ்வீர்கள்.
பூராடம் : இன்று திட்டமிட்டு செயல்படுவதால் உங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.
உத்திராடம் 1 : வீட்டிற்கு தேவையான நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4 : தொழிலில் ஏற்பட்டிருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள்.
திருவோணம் : போட்டியாளர்கள் விலகிச் செல்வர். பொருளாதார நிலை உயரும்
அவிட்டம் 1, 2: இழுபறியாக இருந்த செயல் உங்களுக்கு சாதகமாக முடியும்.

கும்பம் : அவிட்டம் 3, 4: நண்பர்களின் ஆதரவுடன் பொதுக்காரியத்தில் வெற்றி காண்பீர்கள்.
சதயம் : நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செயல் ஒன்று இன்று நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3: உறவினர்கள் திடீர் என வருகை தந்து உங்களை மகிழ்விப்பர்.

மீனம் : பூரட்டாதி 4 : உங்கள் பேச்சிலும்,செயலிலும் கவனம் தேவைப்படும் நாள்.
உத்திரட்டாதி : தடைகளை தாண்டி நினைத்ததை செயல்படுத்தும் நாள்.
ரேவதி: வீடு, பணியிடத்தில் கோபம் கொள்ளாமல் நிதானத்தை கையாளுவது அவசியம்.

குரங்கு காய்ச்சல் நோயினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து அறிக்கை!!

இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் அடிக்கடி வருகை தருவதால், இந்த நோய் இலங்கையிலும் பரவிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குரங்கு காய்ச்சல் நோயினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பாக அரச புலனாய்வு சேவை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு போன்ற அண்டை நாடுகளுக்கு இந்நோய் இன்னும் பரவாததால் இலங்கையில் தற்போது இந்த நோய் அபாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் வாள் வெட்டில் இருவர் உயிரிழப்பு!

இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன

இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன்போது உயிரிழந்த இருவரும் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

அத்துடன், படுகாயமடைந்த நால்வர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்

இந்தநிலையில் இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தனுஷ்கோடி அருகே தீடை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இலங்கை முன்னாள் போலீஸ் அதிகாரி கைது!!

தனுஷ்கோடி தீடை பகுதியில் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை கடலோர காவல்படையினர் பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் முன்னுக்குப் பின்னான தகவல்களை அந்த நபர் தெரிவித்ததால் தீவிரமாக விசாரிக்கப்பட்டார்.

இதனையடுத்து அந்த நபர் இலங்கை திருகோணமலையை சேர்ந்த தினேஷ்காந்த் என தெரியவந்தது. இலங்கையில் 2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை போலீசாகவும் பணியாற்றியவர். பின்னர் விருப்ப ஓய்வு பெற்றதாகவும் கூறியுள்ளார்.

பொதுவாக இலங்கையில் இருந்து தஞ்சமடைய வரும் ஈழத் தமிழர்கள், கடல்வழியாக வருவது வழக்கம். ஆனால் தனுஷ்கோடியில் பிடிபட்ட தினேஷ்காந்த், விசா எடுத்துக் கொண்டு விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்திருக்கிறார்.

அதன் பின்னரே ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிக்கு தினேஷ் காந்த் வந்துள்ளார். ராமேஸ்வரம் அகதிகள் தடுப்பு முகாமுக்கு வரக் கூடியவராக இருந்தால் ஏன் விமானம் மூலம் சென்னை, மதுரைக்கு வர வேண்டும் என்று கடலோர காவல்படையினர் கேள்வி எழுப்பினர். ஆனால் தினேஷ்காந்திடம் இருந்து தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது

மொத்தம் 5 மணிநேரம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சந்தேக நபர் தினேஷ்காந்தின் விசா முடிவடைய 90 நாட்கள் இருக்கிறது; அதனால் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடக் கூடாது என எச்சரித்து கடலோர காவல்படையினர் அவரை விடுவித்திருக்கின்றனர்.

கடவுச் சீட்டுப் படங்களை இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் செயலிழந்துள்ளது.

கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் செயலிழந்துள்ளது.

படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் அந்த சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவரும், படங்களை பிடிப்பதற்கு, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்திம் இணக்கம்!

இலங்கை மிகவும் கடினமான பொருளாதார நிலை மற்றும் கடுமையான கொடுப்பனவு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

நடந்துகொண்டிருக்கும் நெருக்கடியின் தாக்கம், குறிப்பாக மக்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

மே மாதம் ஏற்கனவே நடைபெற்ற தொழில்நுட்ப கலந்துரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் குழு இலங்கையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் வாரங்களில் கொழும்புக்கு ஒரு தனிப்பட்ட பயணத்தைத் மேற்கொள்ள திட்டமிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்றைய நாளுக்கான ராசி பலன் (10-06-2022)

மீனம்: பூரட்டாதி 4: எதிலும் கவனமுடன் இருங்கள். செயலில் தடுமாற்றம் ஏற்படலாம்.
உத்திரட்டாதி: மதியம் வரையில் மனதில் மகிழ்ச்சி இருக்கும். அதன்பின் நெருக்கடி தீரும்.
ரேவதி: பணியில் ஆர்வம் இருந்தாலும் மதியத்திற்கு மேல் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4: இன்று மதியம் வரை இழுபறியாக இருந்த வேலை மாலையில் முடியும்.
ரோகிணி: முயற்சியில் இன்று வெற்றி பெறுவீர்கள். எதிரிகள் விலகிச் செல்வர்.
மிருகசீரிடம் 1, 2: எதிர்பார்ப்பு இன்று மதியத்திற்கு மேல் நிறைவேறும். வாக்கை காப்பாற்றுவீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: அரசு வழியில் பிரச்னை மதியத்திற்கு மேல் சரியாகும். வரவு அதிகரிக்கும்.
திருவாதிரை: பிள்ளைகளால் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். தடைபட்ட வருவாய் வரும்.
புனர்பூசம் 1, 2, 3: பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெற்றோர் ஆதரவால் தேவை நிறைவேறும்.

கடகம் : புனர்பூசம் 4: செயல்களில் மதியத்திற்கு மேல் பின்னடைவு ஏற்படும். அரசு விஷயத்தில் கவனம் தேவை.
பூசம்: திட்டமிட்ட வேலைகளை மதியத்திற்குள் முடிப்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
ஆயில்யம் உங்கள் மனநிலை மதியத்திற்கு மேல் மாறும். உறவுகளால் சங்கடம் ஏற்படலாம்.

சிம்மம் : மகம்: பிற்பகல் வரை தடை தாமதம் என்ற நிலை இருந்தாலும் அதன் பின் செயல் நிறைவேறும்.
பூரம்: எதிர்பார்த்தவற்றில் மதியத்திற்கு மேல் ஆதாயம் கூடும். எண்ணம் நிறைவேறும்.
உத்திரம் 1: தடைகளை சரி செய்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்ப்பு மதியத்திற்கு மேல் நிறைவேறும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: மதியம் வரையில் இருந்த சூழல் அதன்பின் மாறும். பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை
அஸ்தம்: குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போகும். மதியத்திற்கு மேல் செலவு கூடும்.
சித்திரை 1, 2: மனதில் குழப்பங்கள் விலகும். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4: பிற்பகலுக்கு மேல் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனம் மகிழும் சூழல் உருவாகும்.
சுவாதி: இழுபறியாக இருந்த வேலை மதியத்திற்கு மேல் நிறைவேறும். குழப்பம் தீரும்.
விசாகம் 1, 2, 3: செலவு கட்டுப்படும். சுயஆற்றலால் லாபம் ஈட்டுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம் : விசாகம் 4: மதியம் வரை ஆதாயம் வரும். அதன்பின் அலைச்சல், செலவு அதிகரிக்கும்.
அனுஷம்: விறுவிறுப்பாக செயல்படுவீர்கள். மதியத்திற்கு மேல் எதிர்பாராத செலவு ஏற்படும்.
கேட்டை: நம்பிக்கையுடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள். மதியத்திற்கு மேல் செலவு கூடும்.

தனுசு : மூலம்: தொழிலை விரிவு செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
பூராடம்: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத ஆதாயம் வரும்.
உத்திராடம் 1: முயற்சி இன்று வெற்றியாகும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: தடைபட்ட வேலைகள் இன்று முடியும். தொழிலில் முன்னேறுவீர்கள்.
திருவோணம்: செயல்களில் இருந்த சங்கடம் விலகும். பண வரவு கூடும். நினைத்தது நிறைவேறும்.
அவிட்டம் 1, 2: தனித்தன்மை வெளிப்படும். நினைத்ததை அடைவீர்கள். பணவரவு உண்டு

கும்பம் : அவிட்டம் 3, 4: மதியம் வரை இருந்த நெருக்கடி அதன் பின் தீரும். விருப்பம் நிறைவேறும்.
சதயம்: இரண்டு நாளாக அனுபவித்த சங்கடம் மறையும். மனதில் நிம்மதி உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3: நெருக்கடி தீரும். லாபம் பெற புதிய வழிமுறைகளைக் காண்பீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4: எதிலும் கவனமுடன் இருங்கள். செயலில் தடுமாற்றம் ஏற்படலாம்.
உத்திரட்டாதி: மதியம் வரையில் மனதில் மகிழ்ச்சி இருக்கும். அதன்பின் நெருக்கடி தீரும்.
ரேவதி: பணியில் ஆர்வம் இருந்தாலும் மதியத்திற்கு மேல் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 12 அகவையுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 04.06.2022 அன்று இரவு நித்திரை கொள்ள சென்ற சிறுமி அதிகாலையில் வீட்டில் காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவி டிக்டக்கில் அண்மையில் தொடர்பில் இருந்ததாகவும் ஹட்டன் பகுதியினை சேர்ந்த நண்பன் ஒருவரை காதலித்துள்ளதாகவும் Tiktok தகவலின் படி மாணவி காதலனை தேடி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணைகளை மேற்கொண்ட பொலீஸ் குழு ஒன்று சிறுமி காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இளைஞனை தேடி ஹட்டன் நோக்கி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

முள்ளங்கியை உணவில் சேர்ப்பதால் என்ன பலன்கள்…?

முள்ளங்கியில் இருக்கும் இரும்பு சத்து உடலிற்கு வலிமை தருவதோடு, தலை முடியையும் வலிமையாக்கும். அடர்த்தி குறைவாக இருக்கும் தலைமுடியை அடர்த்தியாக்கவும் உதவுகிறது.

முள்ளங்கியில் இருக்கும் நீர்ச்சத்து தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்கும். உடல் சூட்டை குறைத்து உடலுக்கும், தலைமுடிக்கும் சரியான வலிமையை தரும்.

முள்ளங்கியின் ஜூஸ் தலைக்கு தேய்த்து வருவது முடி உதிர்விற்கு நல்ல பலனை தரும். புதிதான முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால், கூந்தல் பளபளப்பாக இருக்கும்.

முள்ளங்கி சாற்றில் ஆலிவ் ஆயிலை சேர்த்து முகத்தில் தடவி வர, வறண்ட சருமத்தில் ஏற்படும் தோல் வெடிப்பு மறையும்.

முள்ளங்கியை கூழாக்கி அதனை க்ளென்சராகவும், பயனுள்ள பேஸ்பேக்காகவும் பயன்படுத்தலாம். இது தோல்களின் துகள் வரை ஊடுருவி நச்சுக்கிருமிகளை அழிப்பதோடு, முகப்பரு, கரும்புள்ளி இவையெல்லாவற்றையும் நீக்கும்.

அதிகமான நன்மைகளை தரக்கூடிய முள்ளங்கியை, உணவில் சேர்ப்பது உடல் உறுப்புகளுக்கும், மிகவும் நல்லது. அதனால் தொடர்ந்து முள்ளங்கியை உணவில் சேர்த்து வருவது நல்லது.

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம்

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

20 புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியம் முழங்க காலை 8.10 மணிக்கு நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்

ரஜினி, ஷாருக்கான், விஜய், கார்த்தி, சரத்குமார், அட்லி, மணிரத்னம், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை வாழ்த்தினர்

பலத்த பாதுகாப்புடன் நடந்த இவர்களின் திருமண போட்டோக்கள் வெளியாகி செம டிரெண்டாகி வருகின்றன. மணமகன் விக்னேஷ் சிவன், பளபளக்கும் பட்டுவேட்டி சட்டையில் ஜொலிக்கிறார்.

Exit mobile version