Home Blog Page 231

காற்று மாசடைவதை தடுக்க அமைச்சர் எடுத்த முடிவு!

நாட்டில் சுற்றுசூழல்,காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக சைக்கிள் பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சைக்கிள் ஓட்டுவதற்காக ஒவ்வொரு வீதியிலும் ஒரு மருங்கை ஒதுக்குவதுடன், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சில ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதற்கான ஒழுங்குமுறை திட்டத்தையும் அமைச்சர் அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம்,போக்குவரத்து நெரிசல் உள்ள போது பயணிக்கும் ஒரு வாகனத்திற்கு கிலோமீட்டருக்கு 103.56 ரூபாவை செலவிட வேண்டியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

சைக்கிள் பாவனையினால்,காற்று மாசுபாட்டை குறைத்தல், நேர விரயத்தை தடுத்தல் போன்று தொற்றாத பல நோய்களை கட்டுப்படுத்த உதவும் என தெரிவித்த அமைச்சர், சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அத்துடன் சைக்கிளை பயன்படுத்துவதன் மூலம் ஒரு கிலோ மீற்றருக்கு 236.48 ரூபாவை மிச்சப்படுத்த முடியும் எனவும் அரசாங்கத்திற்கு 339.98 ரூபா இலாபம் கிடைக்கப்பெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அரசாங்கத்தின் உதவியை நாடவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை அடுத்த வருடத்திற்குள் மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோகோவிச் ஓபனில் விளையாடும் வாய்ப்பு உள்ளது!

ஆண்டின் 2 ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், சொ்பிய டென்னிஸ் வீரா் நோவக் ஜோகோவிச் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால், இம்மாதம் அவுஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்க இயலாத வகையில் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாா் ஜோகோவிச். அடுத்ததாக, பிரெஞ்சு ஓபன் போட்டியில் அவா் பங்கேற்பதிலும் சிக்கல் இருப்பதாக கருதப்பட்டு வந்தது.

ஏனெனில், பிரான்ஸ் அரசும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கியிருந்தது. இந்நிலையில், பிரான்ஸில் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை முதல் புதிய சட்டம் அமலாகியிருக்கிறது.

அதன்படி, பிரான்ஸில் உள்ள விளையாட்டு அரங்கங்கள், மைதானங்கள், திரையரங்குகள், கண்காட்சிகள் ஆகியவற்றிற்கு செல்ல பிரான்ஸ் அல்லது வெளிநாட்டு குடிமக்கள் என எவராக இருந்தாலும் ‘வேக்சினேஷன் பாஸ்’ எனப்படும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருப்பது அவசியமாகும்.

ஆனால், கடந்த 6 மாதங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவா்கள் அதற்கான சான்று வைத்திருக்கும் பட்சத்தில் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்தச் சட்டம் விலக்கு அளிக்கிறது.

கடந்த டிசம்பரில் தாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக ஜோகோவிச் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறாா். எனவே அதன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே, விலக்கு பெற்று அவா் பிரெஞ்சு ஓபனில் விளையாட இயலும் எனத் தெரிகிறது.

என்றாலும், இந்த விவகாரம் தொடா்பாக தற்போதைய நிலையில் பிரெஞ்சு அரசு, ஜோகோவிச் தரப்பு என எவரும் கருத்து தெரிவிக்கவில்லை.

உலகின் நம்பா் 1 டென்னிஸ் வீரரான ஜோகோவிச், மே – ஜூன் காலகட்டத்தில் தொடங்க இருக்கும் பிரெஞ்சு ஓபன் போட்டியிலும் நடப்புச் சாம்பியனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

0

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

பாண்டிராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிப்ரவரி 4-ஆம் தேதி இப்படம் ரிலீஸாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால், 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், படக்குழுவினர் ரிலீஸ் தேதியை மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி மாதம் 17 அல்லது 18 ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புது மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய இன் நோட் 2 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 1080×2400 பிக்சல் அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 4GB ரேம், 64GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., கனெக்டிவிட்டிக்கு 4ஜி எல்.டி.இ., வை-பை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன் பிளாக மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 விலை ரூ. 13,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜனவரி 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது.

அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 12,490 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கப்படுகிறது.

இசையைப் பற்றிய பிரமிக்க வைக்கும் 12 உண்மைகள்!

நாம் புரிந்து கொள்ள முடியாத பல வழிகளில் நமது மூளை செயல்படுகிறது. இசை போன்ற சாதாரண விஷயங்கள் எவ்வாறு மூளையின் செயல்பாடுகளை முற்றிலுமாக மாற்றுகின்றன என்பதைப் பல ஆய்வுகளில் பார்க்க முடிந்திருக்கிறது. இசையைப் பற்றிய இந்த உண்மைகள் உங்களுடைய மனதின் சிக்கலான தன்மையைப் பற்றி உங்களுக்கு தெரிவிக்கும்.

  1. நீங்கள் இசை கேட்கும் போது கிடைக்கும் மெய்சிலிர்ப்பு, பெரும்பாலும் பாடலில் உங்களுக்கு மிக விருப்பமான இடத்தை எதிர்பார்த்து மூளையில் வெளியாகும் டோபமைன் (Dopamine) மூலம் ஏற்படுவதாகும்.

டோபமைன் மூளையால் வெளியிடப்படும், சந்தோஷத்தை தூண்டும் இரசாயனமாகும். ஒரு மனிதனை ஊக்கப்படுத்துவதற்கும் அதேபோல் ஒரு விடயத்தில் அடிமையாக்குவதற்கும் இந்த இரசாயனமே காரணமாகும். இந்த ஆய்வுகளின் மூலம், மனித வரலாற்றின் தொடக்கத்திலிருந்து உலகம் முழுவதும் உணர்ச்சி ரீதியான நிகழ்வுகளுக்கு ஏன் இசை முக்கிய பங்குவகிக்கின்றது என்ற உயிரியல் விளக்கத்தை கண்டறிய முடிந்தது.

  1. மூளையின் எல்லா பகுதிகளையும் பயன்படுத்தும் சில நடவடிக்கைகளை நாம் எந்நாளும் செய்கிறோம், அவற்றில் இசையும் ஒன்று.

செயல்பாட்டு காந்த அதிர்வு இமேஜிங் (F.M.R.I.) இன் உதவியுடன், ஒரு ஆராய்ச்சி குழு இசை கேட்கும் நபர்களின் மூளையைப் பதிவு செய்தது. இதன்போது, இசை கேட்கும்பொழுது மூளையின் ஒலி உள்வாங்கும் பகுதிகள் ஒன்றாக சேர்வதோடு, பெரிய அளவிலான நரம்பியல் வலைப்பின்னல்கள் தொழிற்படுகின்றது என்று அவர்கள் கண்டனர். உண்மையில், இசை மூளையின் உணர்ச்சி, இயக்கம் மற்றும் படைப்பாற்றல் பகுதிகளை செயல்படுத்துவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

  1. தொடர்ந்து இசை வாசித்தல், உங்கள் மூளையின் கட்டமைப்பை மாற்றுகிறது.

மூளையின் சிறப்பியல்பு வாழ்க்கை முழுவதும் அதன் கட்டமைப்பு மாறுவதற்கான திறனைக் கொண்டுள்ளதாகும். கற்றல் தொடர்பான மாற்றங்கள் பெரும்பாலும் நரம்பணுக்களுக்கு இடையே உள்ள தொடர்புகளில் ஏற்படும். இசைக்கலைஞர்களை பற்றி நடத்திய ஆய்வில், தொழில்முறை இசைக்கலைஞர்களில் புறணி எனப்படும் மூளையின் வெளிப்பகுதியை மூடியிருக்கும் பொருள் அதிகமாகவும், புதிதாக இசையை கற்க ஆரம்பித்தவர்களில் இடைநிலையாகவும், இசைக்கலைஞர்கள் அல்லாதவர்களில் மிகக் குறைவாகவும் இருப்பதை கண்டனர்.

  1. நீங்கள் சாப்பிடும்போது தொழிற்படும் அதே விதத்திலேயே இசையைக் கேட்கும்போதும் உங்கள் மூளை தொழிற்படுகின்றது.

மேலே குறிப்பிட்டபடி, டோபமைன் மூளையின் வெளியீடான ஒரு இரசாயனமாகும். அடிமையாதல், பாலினம், மற்றும் சாப்பிடுவது ஆகியவற்றுடன் தொடர்புடைய உணர்வுகளுடன் இந்த இரசாயனம் இணைந்திருக்கின்றது. டோபமைன் ஒரு நபரில் இந்த விஷயங்களில் இன்பத்தை உணர உதவுகிறது. இசைக்கருவிகளை மட்டும் வாசித்து செய்யப்பட்ட ஒரு ஆய்வில், சாப்பாட்டின் சுவையை அறியும்போது மூளை வெளியிட்ட அதே உணர்வையே அந்த இசையை கேட்கும்போதும் வெளியிட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

  1. உடற்பயிற்சி செய்யும் போது இசை கேட்பது உங்கள் செயல்திறனை கணிசமாக மேம்படுத்துகிறது.

உங்கள் மனம் சோர்வடையும் போது உடலும் இலகுவாக சோர்வடைந்து விடக்கூடும். எனினும், இந்த உணர்வை திசைதிருப்ப உங்கள் மூளையால் முடியும். இந்த நுட்பம் சோர்வு உணர்வுகளை மனதிலிருந்து குறைத்து உற்சாகம் போன்ற திடமான மனநிலையை அதிகரிக்கவும் செய்கிறது. மிதமான உடற்பயிற்சி சிறிது கடினமாகும் போது இசையை கேட்பதன் மூலம், நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உடற்பயிற்சி செய்யவதை காண்பீர்கள்.

  1. உங்களுக்கு பிடித்த பாடலை நீங்கள் விரும்பி கேட்க காரணம் அது உங்களின் ஒரு முக்கியமான உணர்வுடன் இணைந்திருக்கக்கூடும்.

பிடித்த பாடல்கள் பெரும்பாலும் அதைக் கேட்கும் சூழலைச் சார்ந்தவை. அண்மைக் கால வெளியீட்டைப் பொறுத்து அநேக மக்கள் பெரும்பாலும் தங்களின் விருப்பமான பாடலை மாற்றிக் கொண்டாலும், நீண்டகால விருப்பத்தேர்வுகள் முக்கியமாக மூளையில் பாடல் தொடர்புடைய நினைவகத்திற்கு ஒரு உணர்ச்சி பிணைப்பை ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

  1. நீங்கள் கேட்கும் இசைக்கேற்ப உங்கள் இதயத்துடிப்பு மாறுகின்றது.

இசை இதய துடிப்பு, இரத்த அழுத்தம், மற்றும் சுவாசம் ஆகியவற்றை மாற்றும் வல்லமை கொண்டது. ஒலி வடிவங்களில் ஏற்படும் மாறுதல்களை ஒரு வளரும் கருவுக்கு கூட தாயின் வயிற்றினுள்ளிருந்தே புரிந்து கொள்ள முடியுமாம்.

  1. மகிழ்ச்சியான அல்லது சோகமான இசையை கேட்பதை பொறுத்து நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை பார்க்கும் விதம் மாறுபடுகிறது.

மூளை எப்பொழுதும் உலகில் என்ன நடக்கிறதென்பதை, கண்கள் வழியாக வரும் தகவலை வைத்து உங்களுக்குத் தெரிந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒப்பிடுகிறது. அந்த ஒப்பீட்டின் இறுதி முடிவையே நாம் யதார்த்தம் என உணர்கிறோம். ஆகையால், சோகமான பாடல்களை விட மகிழ்ச்சியான பாடல்கள் நீங்கள் உலகத்தை வேறு கோணத்தில் பார்க்க உதவுகிறது.

  1. “Earworm” என்பது நீங்களே விருப்பப்பட்டாலும் உங்கள் மனதிலிருந்து நீக்க முடியாத பாடல் ஆகும்.

Earworm என்று உங்கள் மூளையில் ஒரு “அறிவாற்றல் நமைச்சல்” உள்ளது. இந்த “மூளை நமைச்சல்” என்பது, மூளையில் ஒரு பாடலின் தாளத்தின் இடைவெளிகளை நிரப்ப வேண்டியதற்கு தேவையான ஒன்றாகும். உங்கள் மூளையின் புறணிப்பகுதியின் மூலம் ஒரு பாடலின் தாள இடைவெளிகள் தானாக நிரப்பப்படும். இதை எளிதாக கூறுவதானால், உங்கள் மூளை ஒரு பாடல் முடிந்தபின்னும் மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டே இருக்கும்.

  1. இசை, டோபமைன் (இன்பத்தை தூண்டும் இரசாயனம்) வெளியேறும் மூளையின் அதே பகுதியை தூண்டுகிறது.

உணவின் போதும் உடலுறவின் போதும் டோபமைனை வெளியேற்றுவது உங்கள் மூளையின் உட்கருவின் தொழில்களில் ஒன்றாகும். மிகவும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இசைமூலம் இந்த உட்கருவின் ஒரு சிறிய பகுதி தூண்டப்படுகிறது. இது மூளையிலுள்ள உணர்ச்சிகளை தூண்டும் அமிக்டாலா எனும் பாகத்தை செயல்படச்செய்கிறது.

  1. பார்கின்சன் நோய் மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பெரும்பாலும் இசை பரிந்துரைக்கப்படுகிறது.

இசை சிகிச்சை பல தசாப்தங்களாக நடத்தையில் உள்ள ஒன்றாகும். இசை மூளையின் நரம்பணு வலையை சீரமைக்கிறது. இது நேரடியாக மூளையில் மனிதனின் இயக்கத்துக்கும் பேச்சுக்கும் தேவைப்படும் பகுதிகளுக்கு போய்ச்சேர்கின்றது. இதனால் இந்நோயாளிகளுக்கு இசை, அடிப்படை இயக்க திறன்கள் மற்றும் பேச்சு கஷ்டங்கள் ஆகியவற்றை சரி செய்ய உதவுகின்றது.

  1. ஒரு ஆய்வின் படி, இசை கருவியொன்றை வாசிப்பதற்கு கற்பதன் மூலம் பகுத்தறிவு திறன்களையும் இயக்க திறன்களையும் மேம்படுத்த முடியும்.

சிறுவர்களைப் பற்றிய ஆய்வுகளில், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்றவர்களுக்கெல்லாம் இயக்கத் திறன் மற்றும் பகுத்தறிவு திறன்கள் இசை கற்பவரை விட சிறப்பாக அமைந்துள்ளன என கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் பேச்சுத்திறன் மற்றும் தர்க்கரீதியான திறன் ஆகியவற்றிலும் சிறந்து விளங்குகின்றனர் என கூறப்படுகின்றது.

எனவே, முடிந்தவரை மகிழிச்சியான அழகான இசையை கேட்டு நம் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்போம்! முதல் பாகத்தை படிக்க இங்கே அழுத்தவும்.

2147 பட்டதாரிகளுக்கு மட்டக்களப்பில் நிரந்தர நியமனம்

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,147 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுள் 287 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன்; மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நேற்று (25) இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு இடம்பெற்றது

இதனடிப்படையில் மாவட்ட செயலகத்திற்கு 13 பேரும், ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு 19 பேரும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு 14 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு 12 பேரும், கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு 7 பேரும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு 8 பேரும், வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலகங்களுக்கு தலா 26 பேரும் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்கு 8 பேரும், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு 23 பேரும், மண்முனைப் பற்று பிரதேச செயலகத்திற்கு 15 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு 48 பேரும், பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு 21 பேரும், வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு 18 பேரும் வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு 23 பேருமாக 281 பேர் நிரந்தர நியமனக் கடிதங்களை பெற்றுள்ளனர்.
பயிற்சிக் காலத்தினைப் பூர்த்தி செய்யாதவர்களுக்கும் இதன்போது நிரந்தர நிலையத்திற்கான இணைப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களது பயிற்சிக் காலம் நிறைவுற்றதும் அந்த நிலையத்திலேயே அவர்ளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மற்றுமொரு மின் உற்பத்தி நிலையத்திற்கு பூட்டு!

0

இலங்கையில் கெலனிதிஸ்ஸ Sojitz தனியார் மின் உற்பத்தி நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனால் சுமார் 160 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு இழப்பு ஏற்படுவதாக சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தற்போதைய மின்சார நெருக்கடி காரணமாக குறித்த மின் நிலையத்தை மூட இடமளிக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் குழு இன்று குறித்த மின் உற்பத்தி நிலையத்திற்கு சென்று ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் போதுமானதாக உள்ளதால், நாளை வரை மின்சாரத்தை துண்டிக்கக்கூடாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

நாளைய தினத்தின் பின்னர் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானமொன்று எடுக்கப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

மொனராகலையில் இடம் பெற்ற விபத்து: 1வர் உயிரிழப்பு – அறுவர் காயம்!

0

மொனராகலை தனமல்விலைப் பகுதில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக தனமல்விலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேனொன்றும், தனியார் பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் மொனராகலை தனமல்விலைப் பகுதியின் கித்துல்கோட்டை என்ற இடத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ரன்ஜனி வீரசிங்க என்ற 65 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து படுகாயமடைந்த ஆறு பேரும் தனமல்விலை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் வேனொன்றில் மிந்தெனியவில் இடம்பெற்ற மரணக்கிரியை ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் மீண்டும் வீடு திரும்புகையிலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரே வேனை செலுத்தியுள்ளார் என்றும் இவர்களது இரு மகள்கள் மற்றும் மூன்றுப் பேரப்பிளைகள் ஆகியோரே மரணக் கிரியைகளில் கலந்துகொண்டு திரும்பியவர்களென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பாக தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தனமல்விலைப் பொலிஸார் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தந்தையானார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் மற்றும் மனைவி ஹேசல் கீச் தம்பதி, நேற்று தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள யுவராஜ் சிங் , “கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை ஆசீர்வதித்தார் என்பதை, எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆசீர்வாதத்திற்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். இந்த சிறிய குழந்தையை நாங்கள் வரவேற்கும்போது எங்கள் தனியுரிமையை நீங்கள் மதிக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்

யுவராஜ் மற்றும் நடிகை ஹேசல் கீச் நவம்பர் 30, 2016 அன்று ஃபதேகர் சாஹிப் குருத்வாராவில் பாரம்பரிய முறையில் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியின் முதல் குழந்தை இது.

2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளின் உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக இருந்த யுவராஜ் சிங், 2019-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கடும் மனஅழுத்தத்தின் காரணமாக மற்றுமொரு அரச நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்

0

இலங்கையின் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமச்சந்திர எபா பதவி விலகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்தில் இனி மனசாட்சிப்படி செயற்பட முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான பதவி விலகல் கடிதத்தை விவசாய அமைச்சருக்கு அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் மின்சார விநியோகத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினண்டோ (M.M.C. Ferdinando) பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்

Exit mobile version