Home Blog Page 230

அமெரிக்கா சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக களத்தில் இறங்கியது

0

சீனாவின் செல்வாக்கு காரணமாக அல்பேனியாவில் விசேட நடவடிக்கை மையத்தை திறக்க ஐரோப்பாவிலுள்ள அமெரிக்க இராணுவ கட்டளைத் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேட்டோவில் அங்கம் வகிக்கும் அல்பேனியா, சீனாவுடன் தொடர்ந்து உறவை வளர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல வெளிநாட்டு ஆய்வாளர்கள், சீனா சமீபகாலமாக போல்கன் தீவுகளில் உள்ள நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்து வருவதாகவும், இது ஐரோப்பாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று அமெரிக்கா நம்புவதாகவும் வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போது போல்கன் பகுதியில் சுமார் 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான 135 சீன திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், இது இப்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை அதிகரித்து வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் படகுகள் தொடர்பாக – இலங்கை அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

இந்திய மீனவர்களின் பெயர்களில் உள்ள படகுகளுக்கான ஏல அறிவிப்பு விளம்பரத்தை இலங்கை அரசு வெளியிட்டிருப்பது இந்திய நாட்டையே அவமதிப்பது போல் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இந்திய மீனவர்களிடம் இருந்து பல்வேறு கால கட்டங்களில் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை தமிழக மீனவர்களுக்குத் திருப்பி தராமல் தன்வசம் வைத்திருந்த இலங்கை அரசு, 105 படகுகளை அடுத்த மாதம் ஏலம் விடப்போவதாக விளம்பரப்படுத்தியிருப்பது கைப்பற்றப்பட்ட படகுகள் திருப்பி கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்த இந்திய மீனவர்களை பெருத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.

ஏற்கெனவே இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல், கொரோனா தொற்று நோய் பாதிப்பு என பல்வேறு காரணங்களால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவர்களுக்கு, என்றாவது ஒரு நாள் படகுகள் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு இலங்கை அரசின் இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

இலங்கை அரசின் இந்த அறிவிப்பு இயற்கை நியதிக்கு எதிரான செயல். மீனவர்களின் பெயர்களில் உள்ள படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசிற்கு எந்த உரிமையும் இல்லை, சட்டப்படி எந்த அதிகாரமும் இல்லை.

இந்திய மீனவர்களின் பெயர்களில் உள்ள படகுகளுக்கான ஏல அறிவிப்பு விளம்பரத்தை இலங்கை அரசு வெளியிட்டிருப்பது இந்திய நாட்டையே அவமதிப்பது போலவும் உள்ளது.

இலங்கை அரசின் இந்த செயலுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இலங்கை அரசின் செயலை மத்திய அரசு தடுக்காவிட்டால் பிப்ரவரி 2-ந்தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ராமேசுவரம் மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மூலமாக எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கும் உண்டு.

இதுகுறித்து முதல்-அமைச்சர், பிரதமர் மோடிக்கு விரிவாக கடிதம் எழுதியுள்ளார் என்றாலும், ஏலத்திற்கு இன்னும் பதினைந்து நாட்கள் கூட இல்லாத நிலையில், மத்திய அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, படகுகள் ஏலம் குறித்த விளம்பரம் இலங்கை அரசால் ரத்து செய்யப்படுவது உறுதி செய்யப்படவும், அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் வகையில் இலங்கை நாட்டிடம் இருந்து திரும்பப் பெறப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆசிரிய மாணவர்களுக்கு கொரோனா !

இலங்கையின் வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற் கல்லூரி மாணவர்கள் 36 பேருக்கு நேற்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் இருவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் 50 பேருக்கு எழுமாறாக துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில், மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், வவுனியா பல்கலைக்கழகத்தில் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்ட மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் 20 பேருக்கும், வவுனியா பல்கலைக்கழகத்தில் 16 பேருக்குமாக 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றாளர்களை தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

அத்துடன், மீண்டும் வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பொறுப்புடனும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியும் செயற்படுமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு முக்கிய பதவி

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் பந்துவீச்சு வியூக பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி அவுஸ்திரேலியா செல்லவுள்ளது.

இந்தத் தொடர் பிப்ரவரி 11 முதல் 20 வரை நடைபெறும்.

பின்தங்கிய கிராமம் ஒன்றில்14 நாட்களில் தாயை இழந்த இரட்டை குழந்தைகள் வறுமையில் போராடும் தந்தை !(படங்கள் உள்ளே )

0

இலங்கையின் மாத்தளை, மடவல, உல்பத்தை பிரதேசத்தில் தாயை இழந்து பரிதவிக்கும் இரட்டை குழந்தைகள்

இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் இரட்டை குழந்தைகளை பெற்ற தாய் ஒருவர் 14 நாட்களில் உயிரிழந்துள்ள சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளை பிரசவித்த தாயார் 14 நாட்கள் உடல் நலத்துடன் இருந்த நிலையில் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் 32 வயதான சுமித் குமார கருணாரத்ன என்ற தந்தையே குழந்தைகளை பராமரித்து வருகிறார்.

Gallery

கூலி வேலை செய்துவரும் சுமித்திற்கும் நிரோஷாவுக்கும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். குழந்தைகள் சிஸேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த நிலையில் 4 நாட்கள் மருத்துவமனை சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

அன்று இரவு திடீரென ஏற்பட்ட உடல் நல பாதிப்பு காரணமாக தாய் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோதும், அங்கு அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி உயிரிழந்ததனை தன்னால் இன்னமும் நம்ப முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குழந்தைகளை வளர்ப்பதற்கு அவருக்கு போதுமான வருமானம் இன்மையால் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது பொதுமக்கள் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வரும் நிலையில் குழந்தைகளுக்கு பால் பக்கட்கள் கொள்வனவு செய்வதற்கு கூட வசதி இல்லாத அவருக்கு அயலவர்கள் உதவி வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த தந்தையில் அவலநிலை குறித்து சமூக வலைத்தளங்களில் உதவி கோரி பலரும் இந்த தகவல்களை பரிமாறி வருகின்றனர்.

பரீட்சைகள் திணைக்களம் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!

பரீட்சைகள் திணைக்களம் 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பெறாத மாணவர்கள் எவரேனும் இருப்பின், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk க்குச் சென்று, சரியான தேசிய அடையாள அட்டை எண் அல்லது பரீட்சை எண்ணை உள்ளிடுவதன் மூலம் அனுமதி அட்டையின் நகலை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அனுமதி அட்டையின் பெயர், பாடம் மற்றும் மொழி ஆகியவற்றை திருத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தர 2021 பரீட்சை 2022 பெப்ரவரி 07 முதல் மார்ச் 05 வரை நாடளாவிய ரீதியில் 2,439 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுடுநீரில் மிளகு சேர்த்து குடித்தால் இத்தனை நன்மைகள் ஏற்பமா??

பொதுவாக உடல்நிலை சரியில்லாத பொழுது நாம் மிகவும் அசௌகரியமாக உணர்கிறோம். நாம் நோயால் கஷ்டப்படுகிற பொழுது நம்முடைய உடலில் உள்ள ஆற்றல் மட்டுமே குறைந்து போவதில்லை. உங்களுடைய செயல்பாடுகளின் உற்பத்தியும் குறைந்து போகிறது. அதிலும் தற்போதைய சமூக நிலையில் உடல் ஆரோக்கியத்தை முறையாகப் பராமரிப்பது என்பது மிகவும் விலையுயர்ந்த ஆடம்பரமான ஒரு விஷயமாக மாறிவிட்டது.

நம்முடைய முன்னோர்கள் நம்மைப் போல உணவை ருசிக்காகவும் அதனால் ஏற்படும் பிரச்சினைக்காக மருந்தையும் சாப்பிடவில்லை. உணவையே மருந்தாக சாப்பிட்டிருக்கிறார்கள்.

ஆனால் நாம் உணவு எடுத்துக் கொள்ளும் அளவில் மருந்தையும் மருந்து சாப்பிடுகிற அளவில் உணவையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் நம்முடைய முன்னோர்கள் வழியிலேயே நம்முடைய கிச்சனில் இருக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் என்னென்ன குணங்கள் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப அதைப் பயன்படுத்தி உங்களுடைய நோயைக் குணப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

வெறும் வயிற்றில் சுடுநீரில் 7 மிளகு சேர்த்து ஒரு மாசம் குடித்தால் உடலில் ஏற்படும் அதிக பிரச்சினைகளில் இருந்து விடைபெறலாம்.

மிளகில் ஆன்டி-பாக்டீரியல் அதிக அளவில் இருப்பதால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால், மிளகில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை உடலினுள் நுழையும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, உடலில் பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்களை தடுத்து, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

உங்களுக்கு ஆஸ்துமா, நாள்பட்ட மூட்டு வலி போன்றவை இருந்தால், உணவில் மிளகு அதிகம் சேர்த்து வாருங்கள். ஏனெனில் மிளகில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, இப்பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும்.

மிளகில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களான, நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே, மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் மிளகு இரத்த சுத்தப்படுத்தி, உடலில் இருக்கும் ப்ரீ-ராடிக்கல்களை வெளியேற்றிவிடும்.

உங்களுக்கு வயிறு சரியில்லை என்றால், மிளகு சாப்பிடுங்கள். ஏனெனில் மிளகில் உள்ள பெப்பரின் என்னும் பொருள், வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமான பிரச்சனைக்கு நல்ல தீர்வைத் தரும். மேலும் வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றையும் போக்கும்.

உடல் எடையைக் குறைக்க நினைத்தால், மிளகை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். ஏனெனில் மிளகு உடலில் சேரும் கொழுப்புக்களை உடைக்கும்.

அதிலும் எடையைக் குறைக்க உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை மேற்கொண்டு வரும் போது, இதனை சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும். அதுமட்டுமின்றி, மிளகு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, தொப்பையைக் கரைக்கவும் உதவும்.

சூப்பரான முட்டைகோஸ் பகோடா செய்வது எப்படி?

0

தேவையானவை:

கடலை மாவு – முக்கால் கப்

அரிசி மாவு – கால் கப்

நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப்

வெங்காயம் – 2 கப்

சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் – அரை டீஸ்பூன்

இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

உப்பு,

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர, மற்ற பொருள்களைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்துவைத்திருக்கும் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

நம்பிக்கையே மந்திரத்தின் பலம்!

ஏழை இளைஞன் ஒருவன் வறுமையில் வாடினான். தன் பெற்றோரையும் மனைவியையும் காப்பாற்ற வழி எதுவும் அவனுக்குத் தெரியவில்லை.

பொருள் ஈட்டி வருவோம் என்ற நம்பிக்கையில் பக்கத்து நாட்டிற்குப் புறப்பட்டான்.

பசியாலும் நடந்த களைப்பாலும் வருந்திய அவன் வழியிலிருந்து மண்டபம் ஒன்றில் சுருண்டு படுத்து விட்டான்.

அந்த வழியாக மந்திரவாதி ஒருவர் வந்தார். படுத்திருந்த இளைஞனின் நிலையை அறிந்த அவர் அவனுக்கு உதவி செய்ய நினைத்தார்.

தன் மந்திர ஆற்றலால் அங்கே ஓர் அரண்மனையை உண்டாக்கினார். அதற்குள் இருந்து வந்த பேரழகிகள் அந்த இளைஞனை எழுப்பி அரண்மனைக்குள் அழைத்துச் சென்றார்கள்.

இரவு முழுவதும் விருந்தும் கேளிக்கையுமாக இனிமையாகப் பொழுதைக் கழித்தான் அவன்.

பொழுது விடிந்தது. பழையபடி மண்டபத்தில் படுத்திருந்த அவன் அருகில் இருந்த மந்திரவாதியைப் பார்த்தான்.

இரவு நடந்த அதிசயங்கள் அனைத்தும் அவரின் செயல் என்பதை அறிந்தான்.

அவரின் கால்களில் விழுந்த அவன் “நேற்றிரவு நான் பெற்ற இன்ப வாழ்வு நாள்தோறும் எனக்குக் கிடைக்க வேண்டும். இல்லையேல் இந்த உயிரைப் போக்கிக் கொலள்வேன். நீங்கள் தான் அருள் செய்ய வேண்டும்” என்று வேண்டினான்.

அவன் மீது இரக்கம் கொண்டார் அவர். ஒவ்வொரு இரவும் அந்த அரண்மனையைத் தோன்றச் செய்தார். இளைஞனும் மகிழ்ச்சியாகக் காலத்தைக் கழித்தான்.

சில நாட்கள் கழிந்தன.

அவரை வணங்கிய அவன் “நாள்தோறும் உங்களுக்குத் தொல்லை தருவது எனக்குத் துன்பமாக உள்ளது. உங்களுக்குத் தெரிந்த மந்திரத்தை எனக்குச் சொல்லித் தாருங்கள். நானே அரண்மனையை உண்டாக்கிக் கொள்கிறேன்” என்று பணிவோடு வேண்டினான்.

“அந்த மந்திரத்தைக் கற்க கட்டுப்பாடுகள் அதிகம். உன்னால் அது முடியாது. அந்த ஆசையை விட்டுவிடு” என்றார் அவர்.

ஆனால் அவனோ மீண்டும் மீண்டும் அவரை வற்புறத்தினான்.

“நான் சொல்லித் தரும் இந்த மந்திரத்தை நீ தண்ணீருக்குள் இருந்தபடியே ஆயிரம் முறை உச்சரிக்க வேண்டும். அப்படி நீ செய்யாமல் தடுக்க உன் முன் பல மாயைகள் தோன்றும்.

நீ மந்திரத்தை உச்சரித்து முடிந்ததும் உன் முன் பெருந்தீ ஒன்று தோன்றும். நீ அதில் மூழ்கி எழுந்திருக்க வேண்டும். அதன்பிறகு இந்த மந்திரம் உனக்கு பலிக்கும்.

நீ ஏதேனும் தவறு செய்தால் நான் கற்ற மந்திரங்களும் என்னை விட்டு நீங்கி விடும். அதனால் இந்த முயற்சியை விட்டுவிடு” என்றார் அவர்.

“நான் எந்தத் தவறும் செய்ய மாட்டேன். கவனமாக இருப்பேன்” என்றான் அவன்.

அவரும் அவனுக்கு மந்திரத்தைச் சொல்லித் தந்தார்.

அருகிலிருந்த பொய்கைக்குள் மூழ்கினான் அவன். மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தான்.

அவன் முன் பல விதமான மாயைகள் தோன்றின. அவர் தன் மந்திர ஆற்றலால் அவன் குழப்பத்தைப் போக்கிக் கொண்டே இருந்தார்.

ஆயிரம் முறை மந்திரத்தைச் சொல்லி முடித்தான் அவன். பொய்கைக் கரையில் தீ ஒன்று தோன்றியது. அதில் மூழ்கக் கரைக்கு வந்தான் அவன்.

அங்கே கரையில் அவன் மனைவி, தாய், தந்தை, உறவினர்கள் எல்லோரும் அழுது புலம்பிக் கொண்டிருந்தனர்.

அவனைப் பார்த்ததும் “தீயில் பாய்ந்து உயிரை விடாதே. நீ இல்லாமல் நாங்கள் எப்படி வாழ்வோம்? நீ தீயில் பாய்ந்தால் நாங்களும் உன்னோடு தீயில் பார்த்து இறந்து விடுவோம்” என்று கதறினார்கள்.

அவர்களைப் பார்த்த அவன் “இந்தத் தீ உண்மையானதாக இருந்தால் என்னுடன் இவர்களும் அல்லவா இறந்து விடுவார்கள். மந்திரவாதியின் சொற்கள் உண்மையா என்பது தெரியவில்லையே?” என்று குழம்பினான்.

நடப்பது நடக்கட்டும் என்று துணிவை வரவழைத்துக் கொண்ட அவன் அந்தத் தீக்குள் குதிக்கப் போனான். அந்தத் தீ மாயமாய் மறைந்து விட்டது.

அங்கிருந்த மந்திரவாதிக்கு ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது என்பது புரிந்தது. நாமாவது மந்திரத்தைச் சொல்வோம் என்று நினைத்தார். எந்த மந்திரமும் அவர் நினைவுக்கு வரவில்லை.

வருத்தத்துடன் நின்ற இளைஞன் “நீங்கள் சொன்னபடிதான் நடந்து கொண்டேன். நான் சொன்ன மந்திரம் ஏன் பலிக்கவில்லை” என்று கேட்டான்.

அதற்கு அவர் “மந்திரம் பலிப்பதே நாம் அதில் வைத்திருக்கும் நம்பிக்கையால்தான். தீக்குள் பாய்வதற்கு முன் நீ மந்திரத்தின் மேல் சந்தேகம் கொண்டாய். அதனால் அது பலிக்கவில்லை.

உள்ளம் உறுதி இல்லாத உனக்கு மந்திரத்தைக் கற்றுத் தந்ததால் நானும் மந்திரத்தை இழந்துவிட்டேன்” என்றார்.

இருவரும் வருத்தத்துடன் அங்கிருந்து சென்றார்கள்.

இன்றைய நாளுக்கான ராசி பலன்(27-01-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருந்த குழப்ப நிலை நீங்கும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் ஏற்படும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி

நேயர்களே, சமுதாயத்தில் நல்ல மதிப்பை பெற முடியும். அடுத்தவர் ஆலோசனையை அளவோடு எடுத்துக்கொள்ளவும். நட்பால் நல்லது நடக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுன ராசி

நேயர்களே, வீட்டில் பொருள் சேர்க்கை உண்டாகும். தெய்வ பலம் கூடும். மனதில் தெளிவு நிலை பிறக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடக ராசி

நேயர்களே, சாட்சி கையெழுத்து போட வேண்டாம். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்ம ராசி

நேயர்களே, எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். வேண்டியவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். செலவுகளை குறைத்துக் சேமிக்க பழகவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். பிரபலங்களின் நட்பு கிட்டும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம் ராசி

நேயர்களே, தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வரும். கடன் பிரச்சனை குறையும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் நிம்மதி காணப்படும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு உற்சாகம் தரும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, விலகிச் சென்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மகர ராசி

நேயர்களே, குடும்ப தேவைகளை நிறைவேற்றி தர முடியும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கும்ப ராசி

நேயர்களே, நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும். உடல் சோர்வு நீங்கும். எதிர்பாலினத்தாரால் வீண் செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

மீன ராசி

நேயர்களே, வெளிநபர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். மன வலிமை கூடும். மற்றவர்களுக்காக முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

Exit mobile version