Home Blog Page 236

பஸ்களில் நின்றுகொண்டு செல்வோருக்கு இனி நாட்டில் புது சட்டம் ..!!

இலங்கையில் பஸ்களில் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றால் இரண்டு வகையான பஸ் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.

அதன்படி பஸ்களில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று கொண்டு செல்லும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை இருக்கைகளுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்லும் விதிமுறைகளை மீறும் அனைத்து பஸ்களையும் பறிமுதல் செய்யுமாறு கடந்த வாரம் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனினும் கிராமப்புறங்களில் இந்த விதிமுறை மீறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை நிறுத்தப்படாவிட்டால், பஸ்களில் நின்று பயணிக்கும் பயணிகளுக்கு தனியான கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?

சாப்பிடும் நேரத்தில் இன்னொரு பிரச்னை… முதல் வாய்ச்சோற்றை அள்ளி வாயில் வைத்த உடனேயே விக்கல் எடுக்க ஆரம்பித்து விடும். தண்ணீர் குடித்த பிறகு தான் நிற்கும். ஆனால், சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்தால் உடலில் சத்துகள் ஒட்டாது என்பது பலரின் அறிவுரை.

இந்தக் கருத்துகள் ஒருபுறம் இருக்கட்டும். நம் உடலுக்கு என்ன தேவையென்பதை நம் உடலே சில சமிக்ஞைகளின் மூலம் நமக்கு உணர்த்தி விடும். உதாரணமாக, உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால், தாகம் எடுக்கும். அப்போது கண்டிப்பாகக் குடிக்கத் தான் வேண்டும்.

அது சாப்பிடும் நேரமாக இருந்தாலும் பரவாயில்லை. உடலின் தேவையைப் பூர்த்தி செய்தே ஆக வேண்டும். இல்லை யென்றால், தேவையில்லாத உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் என்பது மற்றொரு சாரரின் கருத்தாக இருக்கிறது.சாப்பாட்டுக்கு முன் கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவ ரீதியாக எந்தக் கட்டாயமும் கிடையாது.

சிலர், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவின் அளவு குறைந்து விடும் என்கின்றனர்.தினம் தோறும் செய்யும் சிறிய விஷயங்கள், நம் அன்றாட நடைமுறையாக மாறி, வாழ்வியல் பழக்க வழக்கங்களாக மாறி விடுகின்றன. நாம் பின்பற்றும் வாழ்வியல் பழக்க வழக்கங்கள் சில, நம்முடைய சுகாதார மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு காரணமாகவும், தீர்வாகவும் மாற வாய்ப்புள்ளது.

அதில் ஒன்று தான், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் அருந்துவது, சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது. இந்த விஷயங்களில் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் நாள்தோறும் இருந்த வண்ணம் உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்வை பரிந்துரைக்கும் நிலையில் ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் :

சாப்பாட்டுக்கு முன் கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவ ரீதியாக எந்தக் கட்டாயமும் கிடையாது.

சிலர், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவின் அளவு குறைந்து விடும் என்கின்றனர்.

அதிலும் குறிப்பாக, குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால், அவர்கள் வழக்கமாக சாப்பிடும் அளவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.

மருத்துவர்களும் உடல் எடையை குறைப்பதற்கு சாப்பிடுவதற்கு முன்பு குறிப்பிட்ட அளவு தண்ணீரை பருகுமாறு பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் ஆயுர்வேத முறைப்படி சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் உடல் பலவீனம் அடைவதற்கும், மயக்க மடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறது

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் :

உணவருந்தும் போது தாகம் அல்லது விக்கல் எடுத்தாலோ குறைந்த அளவிலான தண்ணீர் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

உணவருந்தும் போது குளிர்ந்த நீர் குடிப்பதால் செரிமான மண்டலத்தில் என்சைம் செயல்திறன் குறைத்து,

உடலில் வேண்டாத நச்சுக்கள் அதிகமாக உருவாகும் அபாயமும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஏனென்றால், வயிற்றுக்குத் தேவையான அளவு சாப்பிட முடியாது. அதோடு, உணவிலுள்ள சத்துகள் சரியாக உடலுக்குக் கிடைக்காது.

ஆனால், ஆயுர்வேத முறைப்படி உணவருந்தும் போது, குறைந்த நீரை உறிஞ்சிக் குடித்தால் செரிமான மண்டலத்துக்கு நல்லது என கூறப்பட்டுள்ளது.

உணவுகளை உடைப்பதற்கு நீர் உதவியாக இருக்கும் என ஆயுர்வேதம் கூறுகிறது.

சாப்பிடும் போது தாகம் எடுக்கிறதே, எப்படிக் குடிக்காமல் இருக்க முடியும்?’ என்பார்கள் சிலர்.

அப்படித் தாகம் எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. அதற்கு, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம்.

உடலில் தண்ணீர் வற்றி, தொண்டை வறண்டு, தாகம் எடுக்கட்டும் என்று காத்துக் கொண்டிருக்கக் கூடாது.

நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் (Hydrochloride and Dijestive Juices) சுரக்கும்.

சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் அந்த அமிலங்கள் நீர்த்துப் (Dilute) போகும். அதன் வீரியம் குறைந்து ஜீரணக் கோளாறுகள் உண்டாகும்.

இது தொடர்ச்சியாக நிகழும் போது, வயிறு தொடர்பான பிரச்னைகள் உண்டாகும். உதாரணமாக, எந்த விலங்கும் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்காது.

இயற்கையின் நியதியே அதுதான். விக்கல் ஏற்படுகிறது, அடைத்துக் கொள்கிறது. அதனால் தான் குடிக்கிறோம் என்று சிலர் காரணம் சொல்வார்கள்.

இதற்கு, உடலுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது என்று அர்த்தம் அல்ல. நாம் சாப்பிடும் முறை தவறு என்று தான் அர்த்தம்.

சாப்பிடும் போது நிதானமாக மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டால் விக்கல் எடுக்காது.

தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அதையும் மீறி விக்கல் வந்தால் கொஞ்சம் குடித்துக் கொள்ளலாம்.

சாப்பாட்டு பின் தண்ணீர் :

ஆயுர்வேத முறையில் உணவு உட்கொண்ட உடனேயே தண்ணீர் உட்கொள்வதால், சீரான செரிமானம் தடைப்பட்டு உடல்பருமன் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

உணவருந்திய பிறகு 30 நிமிட இடைவேளைக்கு பின் தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

சில்லி பிளேக்ஸ் தயார் செய்வது எப்படி?

உணவு சாப்பிட்ட 1 – 2 மணி நேரத்திற்கு பிறகு நீங்கள் தாகத்திற்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் குடிக்கலாம்.

உணவருந்தும் போது சோடா பானம், காபி போன்றவற்றை பருக வேண்டாம். இது உடல்நலத்திற்கு நல்லதல்ல.

ஆலோசனை :

சிறந்த வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்திற்காக எப்போதும் சூடான நீரை உணவுடன் குடிக்கலாம்.

உலர்ந்த இஞ்சி தூள், வெட்டிவர் வேர்கள், பெருஞ்சீரகம் விதைகளையும் உணவுக்கு இடையில் உட்கொள்ளும் தண்ணீரில் சேர்க்கலாம் என ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சுவையான உருளைகிழங்கு பட்டாணி மசாலா செய்வது எப்படி?

நம் உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. அதனால் தண்ணீரால் நம் உடலுக்கு எந்த ஆபத்தும் வரப் போவதில்லை.

காலையில் தூங்கி எழுந்ததும், வெறும் வயிற்றில் நம்மால் எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு குடிக்கலாம். அது உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

இன்று (25/1/2021) தேய்பிறை அஷ்டமி! கடன் தொல்லை நீங்க பைரவருக்கு ஏற்ற வேண்டிய இந்த தீபம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

தேய்பிறை அஷ்டமியில் பொதுவாக பைரவரை வழிபடுவது சிறப்பாகும். ஆன்மீகத்தில் பைரவருக்கு அஷ்டமி திதி மிகவும் உகந்த திதியாக கருதப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமானது. சிவனின் அம்சமாக கருதப்படும் பைரவர் காலத்தை கணக்கிட கூடியவர்.

அதனால் அவருக்கு காலபைரவர் என்கிற பெயருண்டு. காலத்தால் செய்ய முடியாத எந்த ஒரு விஷயத்தையும் அவர் அருள் இருந்தால் நாம் அதனை வென்று விட முடியும் என்கிற நம்பிக்கை நிலவி வருகிறது. அந்த வகையில் நாளை செவ்வாய்க் கிழமை தேய்பிறை அஷ்டமியில் கடன்கள் நீங்க பைரவருக்கு என்ன விளக்கு போட வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தை மாதத்தில் வரக்கூடிய இந்த செவ்வாய் தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர் கோவிலில் விசேஷமான பூஜைகள் நடத்தப்படும். இந்நாளின் ராகு கால வேளையில் சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபடுவதன் மூலமாக வராத கடன்கள் உங்களுக்கு திரும்பி வந்துவிடும், பிரிந்த உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வதற்கும் இந்த வழிபாடு செய்யலாம். மேலும் உயர் பதவி பெறவும் ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வழிபடுவது உத்தமம்.

பால், இளநீர் ஆகிய ஏதாவது ஒரு அபிஷேக பொருளை பைரவருக்கு வாங்கிக் கொடுத்து இது போல் 8 தேய்பிறை அஷ்டமியில் நீங்கள் வழிபட்டு வந்தால் சகல, சவுபாக்கியங்களும் உண்டாகும். செவ்வாய்க் கிழமையில் வரக்கூடிய ராகு காலம் மதியம் மூன்று மணியிலிருந்து நான்கரை மணி காலம் வரை நீடித்து நிற்கிறது. இந்த ராகு காலத்தில் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரை வழிபட்டால் ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பண கஷ்டம் என்பதே ஏற்படாது. இப்படி ஒவ்வொரு மாதமும் அவரை வழிபட எத்தகைய கடன்களும் நீங்கி செல்வ வளம் பெருக துவங்கும்.

கடன் மேல் கடன் வாங்கி அவதிப்படுபவர்கள் நாளை குளிகை காலம் ஆகிய மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரையிலான காலகட்டத்தில் உங்கள் கடன் தொகையில் இருந்து ஒரு சிறு தொகையை கொடுத்து பாருங்கள், நிச்சயம் முழு தொகையையும் விரைவாகவே அடைத்து விடுவீர்கள். மந்திரம், மாந்திரீகம், பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு நாளைய தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபடுவதன் மூலம் இந்த பிரச்சனைகள் எல்லாம் தவிடுபொடியாகும்.

கால பைரவரை வணங்குபவர்களுக்கு எண்ணிய காரியத்தில் வெற்றி உண்டாகும் மேலும் துர்தேவதைகள் உங்களை அணுகாது. உங்களை எதிர்த்து நின்ற பகைவர்கள் சரண் அடைந்து விடுவார்கள். ஈசானிய மூலையில் வடக்கிழக்கு திசையில் நீல திருமேனியாக அருள் பாலிக்கும் இந்த ஸ்ரீ கால பைரவர் சன்னிதிக்கு அதிகாலையிலேயே எழுந்து குளித்து நீராடி சுத்தமான ஆடை உடுத்திச் சென்று தேய்பிறை அஷ்டமியில் ஒரு வேளை மட்டும் உணவருந்தி விட்டு விரதமிருந்து பஞ்ச தீப எண்ணெய் ஏற்றுவது எத்தனை கடன்கள் இருந்தாலும் விரைவில் அடைப்பதற்கான பரிகாரமாக இருந்து வருகிறது.

பைரவருக்கு வடை மாலை சாற்றி, தயிர் சாதம் அல்லது சர்க்கரை பொங்கல் நைவேத்யம் படைத்து பூஜை முடிந்ததும் அதனை பக்தர்களுக்கு அல்லது ஏழை எளியவர்களுக்கு வழங்கினால் நினைத்தது நடக்கும். நல்லெண்ணெய் ஊற்றி மிளகு தீபம் ஏற்றுவதும் ஒரு பரிகாரம் ஆகும். இந்த பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய், நல்லெண்ணெய் ஆகிய இந்த ஐந்து எண்ணெய்களும் ஐந்து அகல் விளக்குகளில் தனித்தனியாக ஊற்றி தீபமேற்றுவது ஆகும்.

இன்றைய நாளுக்கான ராசி பலன் (25-01-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்ப செலவுகள் அதிகரிக்கும். மனதில் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை விலகும். சாதுரியமான பேச்சால் சாதிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் குதுகலம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வாகனம் யோகம் உண்டு. தொழில், வியாபாரம் சிறப்பான முறையில் செல்லும்.

மிதுன ராசி

நேயர்களே, எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். நட்பால் சில நெருக்கடிகள் வரும். உங்கள் தேவைகள் நிறைவேற வழி பிறக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். உடல் நலம் சீர்பெறும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பிரியமானவர்கள் ஓத்தாசையாக இருப்பர். உத்யோகத்தில் நல்ல வரவேற்பு இருக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம் ராசி

நேயர்களே, சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. பெரிய தொகை பரிமாற்றங்களில் கவனம் தேவை. உறவினர்களின் அன்பு தொல்லை அதிகரிக்கும். உத்யோகத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டி வரும். அடுத்தவரிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, விலகி நின்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். பயணங்கள் தள்ளி போகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கும்ப ராசி

நேயர்களே, சுற்றி இருப்பவர்களின் சுய ரூபத்தை புரிந்துகொள்ள முடியும். காரிய தடை விலகும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும். பல நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.

கவனயீர்ப்பு போராட்டதில் வடக்கு மாகாண தொண்டர்ஆசிரியர்கள்

0

இன்று (24) வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கவனயீர்ப்பில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவிக்கையில், நாங்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றோம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த மற்றும் விசேட தேவையுடையவர்களை கொண்ட குடும்பத்தில் இருந்து தான் நாங்கள் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றோம்.

இந்நிலையில் கடந்த 21.01.2022 அன்று அமைச்சினால் கல்வி வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் 60 தொண்டர் ஆசிரியர்கள் வடக்கு மாகாணத்தில் உள்ளார்கள் என்றும் அவர்களது நியமனம் தொடர்பாக ஆராயுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் வடக்கு மாகாணத்தில் 210 தொண்டர் ஆசிரியர்கள் உள்ளோம். 60 தொண்டர் ஆசிரியர்கள் என குறித்த கடிதத்தில் எவ்வாறு வந்துள்ளது என எமது வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தினை வினவிய போது அவர்கள் தமக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர்.

நாங்கள் இது தொடர்பாக அமைச்சினை வினவியபோது, வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கம் அனுப்பிய பெயர் விவரங்களின் அடிப்படையிலேயே தாங்கள் குறித்த கடிதத்தை அனுப்பியதாக தெரிவிக்கின்றனர்.

மிகுதி 110 பேருடைய பெயர்களும் அந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என நாங்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். எனவே உரிய அதிகாரிகள் எமது நிலையை கருத்தில் கொண்டு எமக்கான நியமனத்திற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் – என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் மற்றும் தீமைகள்

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்றால் என்ன?

ஐபோனின் சிரி (Siri) முதல் சுயமாக ஓடும் கார்கள் வரை செயற்கை நுண்ணறிவு (AI) வேகமாக முன்னேறி வருகிறது. எப்பொழுதும் விஞ்ஞான புனைகதைகள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவை மனிதனைப் போன்ற குணாதிசயங்களைக் கொண்ட ரோபோக்களாக சித்தரிக்கின்றது. ஆனால், Google இன் தேடல் வழிமுறைகள் முதல் IBM இன் வாட்சன் எனப்படும் கணினி அமைப்பு வரை மற்றும் சுயமாக தொழிற்படும் ஆயுதங்கள் வரை எல்லாவற்றிலும் AI உள்ளடங்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு இன்று குறுகிய AI (அல்லது பலவீனமான AI) என்று அறியப்படுகிறது. அதாவது, இது ஒரு குறுகிய பணியைச் செய்வதற்காக மட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது (உதாரணமாக முக அங்கீகாரம் மட்டும், இணையத் தேடல்கள் மட்டும், அல்லது சுயமாக ஓடும் காரின் தொழிநுட்பம் மட்டும்).

இருப்பினும், பல ஆராய்ச்சியாளர்களின் நீண்டகால குறிக்கோள் பொது AI (AGI அல்லது வலுவான AI) ஐ உருவாக்குவதாகும். குறுகிய AI அதன் குறிப்பிட்ட பணியில், உதாரணமாக சதுரங்கம் விளையாடுவது அல்லது சமன்பாடுகளை தீர்ப்பது போன்றவற்றில் மனிதர்களை வென்று விடுகிறது. ஆனால், AGI கிட்டத்தட்ட ஒவ்வொரு அறிவாற்றல் பணியிலும் மனிதர்களை விட சிறப்பாக செயல்படுகிறது.

செயற்கை நுண்ணறிவின் நன்மைகள்

செயற்கை நுண்ணறிவு கணினி அறிவியல், கணிதம் மற்றும் பிற சிக்கலான அறிவியல்களின் மிகவும் சிக்கலான கலவையைப் பயன்படுத்துகிறது. இச்சிக்கலான நிரலாக்கமானது இயந்திரங்கள் மனிதர்களின் அறிவாற்றல் திறன்களைப் பிரதிபலிக்க உதவுகிறது.

  1. தவறுகளை குறைத்தல்

செயற்கை நுண்ணறிவு பிழையை குறைக்க உதவுகிறது மற்றும் அதிக அளவு துல்லியத்துடன் செயற்படுகிறது. இதனாலேயே விண்வெளி ஆய்வு போன்ற பல்வேறு ஆய்வுகளில் இது பயன்படுத்தப்படுகிறது. இவை மாற்றப்படவோ அல்லது சிதைக்கப்படவோ அல்லது விரோதமான சூழலில் முறிவு ஏற்படவோ முடியாத வகையில் அவை உருவாக்கப்பட்டு பழக்கப்படுத்தப்படுகின்றன.

  1. கடினமான ஆய்வு

செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் விஞ்ஞானம் சுரங்க மற்றும் பிற எரிபொருள் ஆய்வு செயல்முறைகளில் பயன்படுத்தப்படலாம். அது மட்டுமல்லாமல், இந்த சிக்கலான இயந்திரங்களை கடல் தளத்தை ஆராய பயன்படுத்தலாம். இவற்றால் மனித வரம்புகளைக் கடந்து பணிபுரிய முடியும்.

ரோபோக்களின் நிரலாக்கத்தின் காரணமாக, அவற்றுக்கு அதிக உழைப்பு மற்றும் கடின உழைப்பை அதிக பொறுப்புடன் செய்ய முடியும். மேலும், அவை எளிதில் களைப்படைவதில்லை.

  1. தினசரி பயன்பாடு

தானியங்கி பகுத்தறிவு, கற்றல் மற்றும் கருத்துக்கான கணினி முறைகள் நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டன. அதுமட்டுமல்லாமல், எங்களுக்கு உதவ சிரி அல்லது கோர்டானா இருக்கின்றது.

ஜி.பி.எஸ் உதவியுடன் நீண்ட பயணங்களுக்கான சாலையைப் பற்றியும் நாங்கள் அறிந்து கொள்கிறோம். ஸ்மார்ட்போன் நாம் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதற்கு பொருத்தமான மற்றும் அன்றாட எடுத்துக்காட்டு. நாம் என்ன தட்டச்சு செய்யப் போகிறோம் என்பதை அவற்றால் கணிக்க முடியும் மற்றும் எழுத்துப்பிழைகளை சரிசெய்ய முடியும்.

தரவை ஒழுங்கமைக்கவும் நிர்வகிக்கவும் செயற்கை நுண்ணறிவு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்களால் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மோசடியைக் கண்டறிதலின் போது ஸ்மார்ட் கார்டு அடிப்படையிலான அமைப்பில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.

  1. டிஜிட்டல் உதவியாளர்கள்

மிகவும் மேம்பட்ட நிறுவனங்கள், பிரதிகளாக அல்லது பயனர்களுடன் உண்மையில் தொடர்பு கொள்ளக்கூடிய டிஜிட்டல் உதவியாளர்களாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன, இதனால் மனித வளங்களின் தேவை மிச்சப்படுத்தப்படுகிறது.

செயற்கை சிந்தனையாளர்களைப் பொறுத்தவரை, உணர்ச்சிகள் பகுத்தறிவு சிந்தனையின் வழியில் வருகின்றன, இது ஒரு கவனச்சிதறல் அல்ல. உணர்ச்சிபூர்வமாக இல்லாமை, ரோபோக்களை தர்க்கரீதியாக சிந்திக்கவும் சரியான முடிவுகளை எடுக்கவும் செய்கிறது. உணர்ச்சிகள், தீர்ப்பை மாற்றக்கூடிய மற்றும் மனித செயல்திறனை பாதிக்கும் மனநிலைகளுடன் தொடர்புடையவை. இயந்திர நுண்ணறிவுக்கு இது முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது.

  1. மீண்டும் மீண்டும் செய்யப்படும் வேலைகள்

இயற்கையில் சலிப்பானதாக இருக்கும் மீண்டும் மீண்டும் செய்யப்படும் வேலைகளை இயந்திர நுண்ணறிவின் உதவியுடன் மேற்கொள்ளலாம். இயந்திரங்கள் மனிதர்களை விட வேகமாக சிந்திக்கின்றன, மேலும் அவற்றால் ஒரே நேரத்தில் பல பணிகளை செய்ய முடியும். அதேபோன்று ஆபத்தான பணிகளைச் செய்ய இயந்திர நுண்ணறிவைப் பயன்படுத்தலாம்.

  1. மருத்துவப் பயன்பாடுகள்

மருத்துவத் துறையிலும், செயற்கை நுண்ணறிவின் பரந்த பயன்பாட்டைக் காண்போம். செயற்கை இயந்திர நுண்ணறிவின் உதவியுடன் நோயாளிகள் மற்றும் அவர்களின் உடல்நல அபாயங்களை மருத்துவர்கள் மதிப்பிடுகின்றனர். இது பல்வேறு மருந்துகளின் பக்க விளைவுகளைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கிறது.

மருத்துவ வல்லுநர்கள் பெரும்பாலும் செயற்கை அறுவை சிகிச்சை சிமுலேட்டர்களுடன் (Simulators) பயிற்சி பெறுகிறார்கள். இது மூளையின் செயல்பாடுகளை உருவகப்படுத்தி நரம்பியல் கோளாறுகளைக் கண்டறிவதில் உதவுகிறது.

மனநல நோயாளிகளுக்கு மன அழுத்தத்திலிருந்து வெளியேறி சுறுசுறுப்பாக இருக்க உதவுவதில் ரோபாட்டிக்ஸ் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவின் பிரபலமான பயன்பாடு கதிரியக்க அறுவை சிகிச்சை ஆகும். கதிரியக்க அறுவை சிகிச்சை உடம்பில் உருவாகும் கட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையில் சுற்றியுள்ள திசுக்களை சேதப்படுத்தாமல் சிகிச்சையைச் செய்கிறது.

  1. இடைவேளைகள் இல்லை

மனிதர்களைப் போலன்றி, இயந்திரங்களுக்கு அடிக்கடி இடைவேளைகள் மற்றும் புத்துணர்ச்சி நேரங்கள் தேவைப்படுவதில்லை. அவை நீண்ட நேரம் செயற்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், இவற்றால் சலிப்பு அல்லது திசைதிருப்பல் அல்லது சோர்வடையாமல் தொடர்ந்து செயல்பட முடியும்.

செயற்கை நுண்ணறிவின் தீமைகள்

  1. அதிக செலவு

செயற்கை நுண்ணறிவுடைய இயந்திரங்கள் மிகவும் சிக்கலான இயந்திரங்கள் என்பதால் அவற்றை உருவாக்குவதற்கு மற்றும் அவற்றின் பழுது மற்றும் பராமரிப்புக்கு பெருமளவு பணம் தேவைப்படுகிறது.

கடுமையான முறிவுகளின் போது, இழந்தவற்றை மீட்டெடுப்பதற்கும் கணினியை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் பெரிய நேரமும் செலவும் தேவைப்படலாம்.

  1. சரியாக மனிதர்களை பிரதிபலிக்காது

எமது ஆறாம் அறிவு இயற்கையின் பரிசு என்று நம்பப்படுகிறது. இயந்திரங்களுக்கு எந்த உணர்ச்சிகளும் தார்மீக மதிப்புகளும் இல்லை. அவை திட்டமிடப்பட்டதைச் செய்கின்றன. அவற்றுக்கு சரியான அல்லது தவறான தீர்ப்பை சரியாக வழங்க முடியாது. அறிமுகமில்லாத சூழ்நிலையை எதிர்கொண்டால் அவற்றுக்கு சரியான முடிவுகளை எடுக்க முடியாது. அத்தகைய சூழ்நிலைகளில் அவை தவறாக செயல்படுகின்றன அல்லது முறிந்து போகின்றன.

  1. அனுபவத்தின் மூலம் முன்னேற்றம் இல்லை

மனிதர்களைப் போலன்றி, செயற்கை நுண்ணறிவை அனுபவத்தால் மேம்படுத்த முடியாது. காலப்போக்கில், அது இலகுவாக முறிவடையும் வாய்ப்புகள் அதிகம். இது நிறைய தரவுகளைச் சேமிக்கிறது, ஆனால் அதை அணுகக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய வழி மனித நுண்ணறிவிலிருந்து மிகவும் வேறுபட்டது.

மாறிவரும் சூழல்களுக்கு இயந்திரங்கள் தங்கள் பதில்களை மாற்ற முடியாதுள்ளது. செயற்கை நுண்ணறிவு உலகில், முழு இதயத்துடனும் அல்லது உணர்ச்சியுடனும் செயல்படுவது போன்ற எதுவும் இல்லை. கடின உழைப்பாளி மற்றும் திறமையற்ற தனிநபரை வேறுபடுத்துவதில் அவை தோல்வியடைகின்றன.

  1. படைப்பாற்றல் திறன் இல்லை

செயற்கை நுண்ணறிவு ஒரு விடயத்தை வடிவமைக்கவும் உருவாக்கவும் உங்களுக்கு உதவ முடியும் என்றாலும், அவை மனித மூளைக்கு ஒப்பான ஆற்றலுடன் இருக்காது. மேலும், அவற்றின் ஒரு படைப்பு, மனிதனின் அசல் தன்மைக்கு பொருந்தாது.

மனிதர்கள் அதிக உணர்திறன் மற்றும் உணர்ச்சி கொண்ட புத்திஜீவிகள். அவர்கள் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள், சிந்திக்கிறார்கள், உணர்கிறார்கள். அவர்களின் எண்ணங்கள், எந்திரங்களில் முற்றிலும் இல்லாத உணர்வுகளால் வழிநடத்தப்படுகின்றன. மனித மூளையின் உள்ளார்ந்த உள்ளுணர்வு திறன்களை இயந்திரங்களால் பிரதிபலிக்க முடியாது.

  1. வேலையின்மை

மனிதர்களை இயந்திரங்களுடன் மாற்றுவது பெரிய அளவிலான வேலையின்மைக்கு வழிவகுக்கும். வேலையின்மை என்பது சமூக ரீதியாக விரும்பத்தகாத நிகழ்வு. இது மனிதர்களின் படைப்பு திறமை அழிவதற்கு வழிவகுக்கும்.

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பரவலாகிவிட்டால், மனிதர்கள் தேவையில்லாமல் இயந்திரங்களை அதிகம் சார்ந்து இருக்க முடியும். அவர்கள் தங்கள் படைப்பு சக்தியை இழந்து சோம்பேறிகளாக மாறுவார்கள்.

எனவே நாம் எதிர் காலத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் போது மேலுள்ள விடயங்களை பற்றி சிந்தித்து செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

கடற்கரையில் கடல் கன்னியாக லாஸ்லியா!

0

சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 5 சீசன்கள் வரை நிறைவடைந்துள்ளது.

இதேவேளை, பிக்பாஸ் சீசன் 3 யில் இலங்கை தமிழ் பெண்னான லாஸ்லியா போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானதால் அடுத்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த நிலையில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் லாஸ்லியா மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடித்து வெளியான Friendship படம் மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதேவேளை, எப்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிடுள்ளார்.

இந்த வகையில் தற்போது கடற்கரையில் ஏஞ்சல் உடையில் போட்டோஷூட் நடத்தி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

https://www.instagram.com/p/CZCDY7Hpozs/?utm_source=ig_embed&ig_rid=c7b9f99c-d5fe-4c49-854b-6119741423b9

மனித உயிர்வாழ்க்கைக்கு தேவையான மற்றுமொரு பொருளிற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு

0

தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுகின்றது.

இதன் காரணமாக நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாள​ர் ஏக்கநாயக்க வீரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி நீரை பயன்படுத்துமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் குடும்பத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி!

0

அவுஸ்ரேலியாவில் நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் இலங்கை தமிழ் குடும்பமான பிரியா-நடேஸ் குடும்பம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், அவர்களுக்கு சார்பாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை, பிரியா, அவரது கணவர் நடேஸ் மற்றும் மூத்த மகள் கோபிகா ஆகியோர் தமது bridging விசாவை புதுப்பிக்கமுடியாதவகையில் குடிவரவு அமைச்சர் மேற்கொண்டிருந்த நடவடிக்கையில், procedural fairness- பரிசீலனை சார்ந்த நியாயத்தன்மை பேணப்படவில்லை என Federal Circuit நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், பிரியா – நடேஸ் குடும்பத்தினரின் குறித்த விசா விண்ணப்ப விவகாரத்தில் குடிவரவு அமைச்சர் Alex Hawke குடிவரவுச் சட்டத்திலுள்ள “lower the bar” என்ற அம்சத்தை முன்மொழிந்திருப்பதாக கடந்த ஆண்டு ஜுன் மாதம் இக்குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, பிரியா, நடேஸ் மற்றும் கோபிகா ஆகிய மூவருக்கும் 12 மாதங்களுக்கான bridging விசா வழங்கப்பட்டது.

இருப்பினும், இரு மகள் தருணிகா இதில் உட்படுத்தப்படவில்லை. குடிவரவு அமைச்சரால் முன்மொழியப்பட்ட “lower the bar” அடிப்படையில் பிரியா, நடேஸ் மற்றும் கோபிகா ஆகியோர் bridging விசாவிற்கு மீளவும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு நீக்கப்பட்டது.

தருணிகா ஏற்கனவே தாக்கல் செய்திருந்த விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இந்த விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில், இவ்விவகாரம் குடிவரவு அமைச்சரின் முடிவுக்காக காத்திருப்பதால், தருணிகாவுக்கு bridging விசா வழங்கப்படவில்லை என உள்துறை அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த குடும்பம் நீண்டதொரு சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவரும் பின்னணியில், எதிர்காலத்தில் பிரியா குடும்பத்தின் bridging விசாவை மீளப்பெறுவதற்கான எந்த முடிவும் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் வாய்ப்பினை இந்த வெற்றி பெற்றுத்தந்துள்ளதாக, இக்குடும்பத்தின் சட்டத்தரணி Carina Ford தெரிவித்துள்ளார்.

Federal Circuit நீதிமன்றின் இத்தீர்ப்பிற்கு எதிராக அரசு மேன்முறையீடு செய்யலாம் அல்லது செய்யாமல் விடலாம் என Carina Ford மேலும் தெரிவித்தார்.

அவ்வாறு அரசு மேன்முறையீடு செய்யாதபட்சத்தில், பிரியா குடும்பம் தமது bridging விசா முடிந்தபின்னர் அதற்காக மீள்விண்ணப்பம் செய்யமுடியுமென Carina Ford சுட்டிக்காட்டினார்.

இக்குடும்பத்தின் bridging விசா எதிர்வரும் செப்டம்பர் மாதம் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலுமொரு முடி வெட்டும் ஆசாமி சிக்கினர்!

0

இன்று (24-01-2022) திங்கட்கிழமை பண்டாரவளைப் பகுதியில் மாணவி ஒருவரது தலைமுடியை வெட்டிய நபரை, பண்டாரவளைப் பொலிஸாரால், கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது சம்பவம் ஹீல்ஓய புகையிரத நிலையத்தில் மறைந்திருந்த வேளையில் இடம்பெற்றுள்ளது.

ஹீல்ஓயாப் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி, பண்டாரவளை நகரில் தனியார் மேலதிக வகுப்பொன்றிற்கு சென்று, தனியார் பேருந்து ஒன்றில் ஹீல்ஓயாவிற்கு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே, தலைமுடியை இழந்துள்ளார்.

இது குறித்து, பண்டாரவளைப் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டினையடுத்து, பொலிஸார் விரைந்து மேற்கொண்ட தேடுதலில், ஹீல்ஓய புகையிரத நிலையத்தில் மறைந்திருந்த நபரைக் கைது செய்தனர்.

இதன்போது குறித்த நபரின் உடைப் பையை சோதனையிட்ட பொலிசார், அந்த உடைப் பைக்குள் இருந்த மாணவிகள் மற்றும் யுவதிகளினது எனக் கருதப்படும் 38 நீண்ட தலைமுடிச் சுருள்களையும் கைப்பற்றினர்.

இதையடுத்து குறித்து நபர் பொலிஸ் விசாரணைக்குற்படுத்தப்பட்ட வேளையில், அழகிய பெண்களின் நீண்ட தலைமுடிகளை வெட்டி சேகரிப்பது தனது பொழுதுபோக்காக கொண்டிருப்பதாக வாக்குமூலம் வழங்கியதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும், அந்த நபர் 33 வயதுடைய திருமணமானவர் என காவல்துறையின்ர கூறினர்.

விசாரணைகளின் பின்னர், அவர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென பண்டாரவளை பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Exit mobile version