வட அயர்லாந்தின் அரசியல் களத்தில் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய யூனியனிஸ்ட் குரல் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜிம் அலிஸ்டர், குடியேற்றவாசிகள் குறித்து வெளியிட்ட கேலி சித்திரம் பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்தக் கேலி சித்திரம் டப்ளினில் இருந்து வட அயர்லாந்துக்குக் குடியேற்றவாசிகள் பேருந்து மூலம் எல்லையைக் கடந்து வருவதைக் காட்டுகிறது. இது வட அயர்லாந்தின் முன்னணி அரசியல் கட்சிகளின் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. டி.யு.வி தலைவர் ஜிம் அலிஸ்டர், இந்தக் கேலி சித்திரம் பிரித்தானியா மற்றும் அயர்லாந்துக்கு இடையே உள்ள ‘பொதுப் பயணப் பகுதி’ ஒப்பந்த விதிமுறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை எடுத்துக்காட்டுவதற்காகவே பகிரப்பட்டதாக கூறியுள்ளார்.
எல்லையோரக் குடியேற்றவாசிகள் பிரச்சினை வட அயர்லாந்தில் ஏற்கனவே ஒரு பெரிய அரசியல் விவாதப் பொருளாக உள்ள நிலையில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இத்தகைய கார்ட்டூனைப் பகிர்ந்துள்ளது அங்கு அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த நிகழ்வு வட அயர்லாந்தின் அரசியல் களத்தில் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சினையில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கவனிக்க வேண்டிய விடயமாக உள்ளது.











































