பிந்திய செய்திகள்

உணவு உண்ணும்போது அவசரப்படக்கூடாது

உணவை வேகமாக சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லதல்ல. அதன் வெளிப்பாடாக வயிறு உப்புசம், அஜீரணம், அசிடிட்டி உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாகலாம். இதனை தவிர்க்க, சில எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றினால் போதுமானது.

சாப்பிடும் முன்பு நிதானமாக அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளவேண்டும். கையில் உணவை குறைவாக எடுக்கவேண்டும். அதாவது வாய் நிறைய சாப்பிடுவதற்கு பதிலாக சிறிதளவு சாப்பிடவேண்டும்.

உணவை விழுங்குவதற்கு முன்பு நன்றாக மெல்லவேண்டும். ஒருமுறை வாய்க்குள் உணவை வைத்ததும் உடனே கையில் உணவை எடுக்கவேண்டாம். வாய்க்குள் இருக்கும் உணவை மென்று விழுங்கும்வரை கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts