பிந்திய செய்திகள்

சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம் ஆறாவது நாளுக்கு தொடருகிறது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதாரத் தொண்டர்கள் தங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என ஆரம்பித்த போராட்டம் ஆறாவது நாளாகவும் நடைபெறுகிறது.

இன்று இரு அணிகளாக பிரிந்த சுகாதாரத் தொண்டர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும் கொழும்பு சுகாதார அமைச்சுக்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாண வைத்தியசாலையின் 92 சுகாதாரப் பணியாளர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், அதன் பின்னர் ஐந்து வருடங்களாக பணியாற்றிய மற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என சுகாதாரத் தொண்டர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்றையதினம் கொழும்பு சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts