பிந்திய செய்திகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருந்துக் களஞ்சியத்தில் தீப்பிடித்தது

யாழ்ப்பாண வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த விசாரணைகள் முழுமையாக நடத்தப்படும் என்று பிரதி சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாண வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து ஒரு அபாயகரமான சம்பவமாகும் என்று பிரதி சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உள்ள மருந்துகள் மற்றும் அவற்றின் இருப்புக்கள் தொடர்பான விபரங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு வரும் காலகட்டத்தில் இந்த விபத்து நேர்ந்திருப்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விபத்து நேர்ந்த உடனடியாகவே, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இது குறித்துச் சுகாதார அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்திருந்தார் என்பதை பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். அவரது முறைப்பாடு கிடைக்கப்பெற்ற கணமே, இச்சம்பவத்தின் உண்மைப் பின்னணியைக் கண்டறிவதற்கென உரிய உயர்மட்ட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்குத் தான் பணிப்புரை விடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தீ விபத்தின் பின்னணியில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது திட்டமிட்ட சதிச் செயல்கள் காணப்படுகின்றனவா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையிலான முழுமையான விசாரணை அறிக்கை மற்றும் அதன் முன்னேற்றங்கள் மிக விரைவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதி சுகாதார அமைச்ச

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts