செம்மணியில் 09 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு என்பு கூட்டின் மேல் இருந்து நாணய குற்றி ஒன்றும் சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.
இது செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 20ஆம் நாள் அகழ்வு பணிகளாகும். அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது.
ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட சிறுவர்களுடைய 08 என்பு கூட்டு தொகுதி உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு குற்றி ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட சிசுவினுடைய என்பு கூட்டு தொகுதி உட்பட மேலும் ஒரு குற்றி மீட்கப்பட்டுள்ளது.









































