பிந்திய செய்திகள்

முட்டை உணவில் ஒரு முக்கிய பங்கு – அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

ஒவ்வொரு நாளும் முட்டை சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. ஏனெனில் முட்டைகளில் உயர்தர புரதம், வைட்டமின் பி12, டி, ஏ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. தசை சீரமைப்பு, மூளை செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கும் செலினியம், கோலின் போன்ற ஊட்டச்சத்துகளும் அதில் உள்ளன. ஆனால் முட்டை சாப்பிடும்போது மிதமாகவும், சமநிலையுடனும் இருக்க வேண்டும். அதிக கொழுப்புள்ள உணவுடன் சேர்த்து முட்டையையும் அதிகமாக சாப்பிடுவது சிலருக்கு கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கக்கூடும்.

முட்டையின் மஞ்சள் கருவை சிலர் தவிர்த்துவிடுவார்கள். ஆனால் அதில் கோலின், வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே, முழு முட்டையையும் சாப்பிடுவதே சிறந்தது. முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடக்கூடாது என்றால் மட்டுமே அதை தவிர்க்க வேண்டும். அவித்த முட்டைகளில் சத்துக்கள் நேரடியாக கிடைக்கின்றன. முட்டையை வேகவைக்கும்போது கலோரிகள் குறையும். ஆரோக்கியமற்ற கொழுப்புகளும் நீங்கி விடும். ஆனால் முட்டையை பொரிப்பது கலோரிகளை அதிகரிக்கச் செய்யும். தேவையற்ற எண்ணெய்யும் உடலில் சேரும்.

செரிமானத்தை மேம்படுத்தவும், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தரவும், ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதை கட்டுப்படுத்தவும் முட்டை உதவும். வெறுமனே அவித்த முட்டையாக சாப்பிடாமல் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், முழு தானியங்கள் அல்லது பழங்களுடன் சேர்த்து உண்பது சிறந்தது. முட்டைகளை வாங்கி வந்து நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்தக்கூடாது. சரியான முறையில் சேமித்து வைக்காவிட்டால் பாக்டீரியா வளர்ச்சிக்கும் உணவு நஞ்சாதலுக்கும் வழிவகுக்கும்.

முட்டையை வேகவைப்பதற்கு முன்பு நீரில் நன்கு கழுவ வேண்டும். அது ப

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts