யாழ்ப்பாணம் பண்டத்தரப்பில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான தியான இல்லத்தில் ஒரு பெரிய கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது. அதில் திருச்சபையின் ஆயர்கள், மதகுருக்கள் மற்றும் இளையோர் பலர் கலந்து கொண்டனர். நானும் அந்த கருத்தரங்கில் உரையாற்றினேன். எனது உரை சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அதன் போது ஒரு மூத்த ஆயர் எனது உரைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவர் இரத்தினபுரி மறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று நான் கேட்டபோது, அவர் “இலங்கையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடினால் அரசாங்கம் அதை நசுக்கும். அது சிங்கள இளையோர் ஆக இருந்தாலும் சரி, தமிழ் இளையோராக இருந்தாலும் சரி. ஒரு அரசாங்கமாக அதை அவர்கள் நசுக்குவார்கள். இதுதான் ஜெவிபிக்கும் நடந்தது. இதுதான் தமிழ் புலிகளுக்கும் நடந்தது. இதில் இன முரண்பாடு இல்லை. அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினால் அதனை அரசாங்கம் நசுக்கும். அதுதான் 2009 நடந்தது” என்று கூறினார்.
அதற்கு நான் மீண்டும் கேட்டேன், “அப்படியென்றால் அரசாங்கத்துக்கு எதிராக போராடும் ஆயுதப் போராட்டத்தை மனிதாபிமானமற்ற குரூரமான வழிகளில் ஓர் அரசாங்கம் நசுக்குவதை கிறிஸ்தவம் ஏற்றுக் கொள்கிறதா?” என்று. அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் அங்கே வந்திருந்த ஒரு மதகுரு எனது பேச்சை சிறிது கூடுதலாக சிங்களத்தில் மொழிபெயர்க்க முயன்றார். இதனால் அவர் அதில் தவறு இருந்ததாக யோசிக்கிறேன். அவர் சிறிது கூடுதலாக மொழிபெயர்க்க முயன்றால், அது ஆயரின் எதிர்ப்பிற்கு வழிவகுத்திருக்கும்.
இருக்கலாம். ஆனால் அன்று அந்த மூத்த ஆயர் என்ன சொன்னாரோ அதைத்தான் அண்மையில் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் அலுவலகத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஜூ







































