வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் நேற்றிரவு அரங்கேறிய கொடூரமான கத்திக்குத்துச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பெல்ஃபாஸ்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு வெளியே 40 வயதுடைய நபர் ஒருவர் மீது, மர்ம நபர் ஒருவர் மிகக் கொடூரமாக கத்தியால் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் முகம், கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் சூடான் நாட்டைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் கைது செய்துள்ளனர். இக்கொடூர தாக்குதல் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்தச் சம்பவத்தை “அருவருப்பானது மற்றும் அதிர்ச்சியளிக்கக்கூடியது” எனக் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் இத்தகைய வன்முறைகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார். அத்துடன், வன்முறையைத் தடுக்கத் துணிச்சலுடன் முன்வந்த பொதுமக்களுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாகப் பொதுமக்கள் அனைவரும் முழுமையான அமைதியைக் கடைப்பிடிக்குமாறும் டவுனிங் ஸ்ட்ரீட் மற்றும் வட அயர்லாந்து அரசியல் தலைவர்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதி ஆகியவற்றை உறுதி செய்வதற்கு பொலிஸார் முழு முயற்சியை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள







































