பிந்திய செய்திகள்

களுத்துறை, காலி மாவட்டங்களில் நீர்வெள்ளம்

களுத்துறையின் பல பகுதிகளில் இன்று 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும். இது தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை, வாதுவ, மாத்துகம, பேருவளை, அளுத்கம மற்றும் பயாகல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

கெத்தென நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சார விநியோகத்தில் திட்டமிடப்பட்டிருந்த இடையூறு காரணமாக இந்த நீர் விநியோகம் நிறுத்தப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த இடையூறு காரணமாக ஏற்படும் அசௌகரியத்திற்கு மன்னிக்குமாறு மக்களிடம் வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காலி மாநகர சபை எல்லைக்குள் இன்று 14 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, அப்பகுதிக்கு காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts